ஆசிய கிண்ண  தகுதிகாண் கால்பந்து போட்டி : கடினமான குழுக்களில் இலங்கை

Published By: Digital Desk 4

24 May, 2022 | 10:32 PM
image

(நெவில் அன்தனி)

இரண்டு வயது பிரிவுகளுக்கான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (ஏஎவ்சி) ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான குலுக்கல் கோலாலம்பூரில் உள்ள ஏஎவ்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.

17 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டிகள் முறையே பாஹ்ரெய்னிலும் உஸ்பெகிஸ்தானிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ளன.

இந்த இரண்டு போட்டிகளுக்குமான தகுதிகாண் சுற்றுக்களில் கடினமான குழுக்களில் இலங்கை இடம்பெறுகின்றது.

44 நாடுகள் 10 குழுக்களில் பங்குபற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணப் போட்டியில் ஜே குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது.

வரவேற்பு நாடான உஸ்பெகிஸ்தான், தென் கொரியா, புருண்டி தருசலாம் ஆகியனவும் ஜே குழுவில் இடம்பெறுகின்றன.

இப் போட்டியில் ஏ, பி, சி, டி ஆகிய 4 குழுக்களில் தலா 5 நாடுகளும் ஈ, எவ், ஜீ, எச், ஐ, ஜே ஆகிய 6 குழுக்களில் தலா 4 நாடுகளும் போட்டியிடுகின்றன.

17 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்று எதிர்வரும் அக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Draw results

Group A: Japan, Jordan (H), Syria, Philippines, Turkmenistan

Group B: Indonesia (H), Malaysia, Palestine, Guam, UAE

Group C: Oman (H), Iraq, Qatar, Lebanon, Bahrain

Group D: India, Saudi Arabia (H), Myanmar, Maldives, Kuwait

Group E: Yemen, Bangladesh (H), Singapore, Bhutan

Group F: Thailand, Vietnam (H), Chinese Taipei, Nepal

Group G: Australia (H), China PR, Cambodia, N. Mariana Islands

Group H: Tajikistan (H), Afghanistan, Timor-Leste, Mongolia

Group I: IR Iran, Hong Kong, Kyrgyz Republic (H), Laos

Group J: Korea Republic, Brunei Darussalam, Uzbekistan (H), Sri Lanka

20 வயதின்கீழ் ஆசிய கிண்ணம்

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண  தகுதிகாண்  போட்டியில் ஈ குழுவில் வரவேற்பு நாடான மொங்கோலியா, தென் கொரியா, மலேசியா ஆகிய நாடுகளுடன் இலங்கை இடம்பெறுகின்றது.

இந்த வயது பிரிவிலும் ஏ, பி, சி, டி ஆகிய நான்கு குழுக்களில் தலா 5 நாடுகளும் ஈ, எவ், ஜீ, எச், ஐ, ஜே ஆகிய 6 குழுக்களில் தலா 4 நாடுகளுமாக மொத்தம் 44 நாடுகள் போட்டியிடுகின்றன.

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு வயதுப் பிரிவுகளிலும் லீக் சுற்று முடிவில் முதலிடங்களைப் பெறும் 10 நாடுகளும் அதிசிறந்த 2ஆம் இடங்களைப் பெறும் 5 அணிகளும் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

Draw Results

Group A: Saudi Arabia (H), China PR, Myanmar, Maldives, Uzbekistan

Group B: Qatar, Bahrain (H),Bangladesh, Nepal, Bhutan

Group C: Japan, Yemen, Palestine, Laos (H), Guam

Group D: Jordan (H), Chinese Taipei, Syria, Turkmenistan, N. Mariana Islands

Group E: Korea Republic, Malaysia, Mongolia (H), Sri Lanka

Group F: Indonesia (H), Vietnam, Hong Kong, Timor-Leste

Group G: Thailand, Oman (H), Philippines, Afghanistan

Group H: Australia, Iraq (H), India, Kuwait

Group I: Tajikistan (H), Cambodia, Lebanon, Singapore

Group J: UAE, IR Iran, Kyrgyz Republic (H), Brunei Darussalam

17 வயதுக்குட்பட்ட இறுதிச் சுற்று பாஹ்ரெய்னில் நடைபெறுவதால் அந்த நாடு நேரடி தகுதியைப் பெறுகின்றது.

அதேபோன்று   20 வயதுக்குட்பட்ட இறுதிச் சுற்று உஸ்பெகிஸ்தானில் நடைபெறுவதால் அந்த நாடு நேரடி தகுதியைப் பெறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41