பாராளுமன்றம் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறது - மத்திய வங்கி ஆளுநர் 

Published By: Digital Desk 4

24 May, 2022 | 09:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்க்கொண்டுள்ள மோசமான பொருளாதார சூழ்நிலையில் உண்மையான யதார்த்தத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதுடன், நீண்டகால பொருளாதார ஸ்தீரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களுக்கு அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் இலாபமின்றி கட்சி பேதங்களை விடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் வலியுறுத்தினார்.

Articles Tagged Under: Gobernador del Banco Central Dr. Nandalal Weerasinghe  | Virakesari.lk

வரவு-செலவு திட்டத்தை தயாரிக்கும் போது மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானம் உண்மை நிலைக்கு அப்பால் நடைமுறைக்குச்சாத்தியமற்ற வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பாராளுமன்றம் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறது எனவும் ஆளுநர் குழுவின் முன்னிலையில் எடுத்துரைத்தார்.

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட தொகையை விட மேலதிகமாக ஒரு ரில்லியன் ரூபா வரை கடன் பெறும் தீர்மானத்தை பாராளுமன்றில் முன்வைக்க அரசாங்க நிதி பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாட மத்திய வங்கியின் ஆளுநர்,திறைச்சேரியின் செயலாளர் உட்பட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் நேற்றைய தினம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகினர்.

 கடந்த காலங்களி;ல் எரிபொருளுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதற்கு எதிராக தவறான குற்றச்சாட்டுக்களும்,எதிர்ப்புக்களும் முன்வைக்கப்பட்ட காரணத்தினால் அதனை  செயற்படுத்த முடியாமல் போனது,தற்போது மீண்டும் அதே எரிபொருள் விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் கொள்கைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்காலத்தில் எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை கொள்வனவிற்கு பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.

அத்துடன்  இலங்கை மின்சார சபை,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்,லிட்ரோ போன்ற நிறுவனங்களுக்கு எங்கிருந்தாவது டொலர்களை பெற்றுக்கொடுத்தாலும் அந்நிறுவனங்கள் எதிர்க்கொண்டுள்ள அதிக நட்டம் காரணாக டொலர்களை கொள்வனவு செய்வதற்கு போதிய இலங்கை ரூபாய்கள் இன்மை பிறிதொரு பாரிய பிரச்சினையாக உள்ளது.அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான முதல் சுற்று தொழில்நுட்ப பிரிவின் பேச்சுவார்த்தை இன்று . இப்பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்து,கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளக்கூடிய 3 தொடக்கம் 4 வரையிலான மாத காலப்பகுதி சவால் மிக்கதாக அமையும்.இச்சவாலை எதிர்க்கொள்ள இயலுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மை காலத்தில் வரவு-செலவு திட்டத்தை தயாரிக்கும் போது மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானம் உண்மை நிலைக்கு அப்பால் நடைமுறைக்குச்சாத்தியமற்ற வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பாராளுமன்றம் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறது.மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அமைச்சுக்கள் உள்ளிட்ட செலவினங்களுக்காக அதிக தொகை ஒதுக்கப்படுவது இறுதியில் ஈடு செய்ய முடியாத அளவிற்கு வரவு-செலவுதிட்டத்தில் துண்டுவிடும் தொகை ஏற்படுவதுடன்,கடன் சுமைக்குள் சிக்குவதும் இதற்கு ஏதுவான காரணம்.

அத்துடன் வருமான வரியை உரிய முறையில் வசூலித்தல்,இரத்தினப்பல் கைத்தொழில் உட்பட ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது இடம்பெறும் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு நாட்டில் உரிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துவது அவசியமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்கான குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை குழுவின் முன்னிலையில் தெளிவுப்படுத்தினார்.

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட தொகையை விட மேலதிகமாக ஒரு ரில்லியன் ரூபா வரை கடன் பெறும் தீர்மானத்தை பாராளுமன்றில் முன்வைக்க அரசாங்க நிதி பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன் நாட்டில் ஸ்தீரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மற்றும் அதற்கான செயலாற்றுகை திட்டம் தொடர்பில் முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா மத்திய வங்கியின் ஆளுநரிடம் பரிந்துரைத்தார்.கொள்கை ரீதியிலான அறிக்கையை பாராளுமுன்றில் சமர்ப்பித்து உரிய ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40