ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலர்களுடன் ஒருபோதும் இணையேன் - சஜித் உறுதி

Published By: Digital Desk 4

24 May, 2022 | 08:38 PM
image

(நா.தனுஜா)

தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா? இல்லாவிட்டால் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய கொள்கையை அடிப்படையாகக்கொண்ட அரசியலில் ஈடுபடுவதா? என்ற கேள்வி எழும்போது, ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாகச் செயற்படுவர்களுடன் நான் ஒருபோதும் இணையமாட்டேன் என்ற தீர்மானத்தையே மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பற்ற முறையில் உண்மையாகவும் தைரியமாகவும் செயல்பட ஊடகங்களுக்கு  சுதந்திரமளித்தவர் ராஜமஹேந்திரன் - சஜித் | Virakesari.lk

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஒட்டுமொத்த நாடும் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற தருணத்தில், அதற்கு மாறான விடயங்களே நடைபெறுகின்றன.

கடந்த காலங்களில் ஊழல்களில் ஈடுபட்டவர்களின் விபரங்கள் கோப் குழுவின் அறிக்கையூடாக வெளியிடப்படும் தற்போதைய சூழ்நிலையில், திருடர்களையும் ஊழல்வாதிகளையும் பாதுகாப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்துகின்றது. மக்கள் உயிர்வாழ்வதற்குரிய தமது உரிமையையே கோருகின்றனர். 

ஆனால் தூரநோக்கற்றதும், செயற்திறனற்றதுமான தீர்மானங்களால் சிறுகுழந்தைக்குக்கூட உயிர்வாழமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது. நாடு தள்ளப்பட்டிருக்கும் இந்த நிலைக்கு முன்னாள் நாம் எதனையும் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டுமா?

தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா? இல்லாவிட்டால் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய கொள்கையை அடிப்படையாகக்கொண்ட அரசியலில் ஈடுபடுவதா? இவ்விடயத்தில் முக்கியமான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.

நான் பிரதமர் பதவியை நிராகரித்தேன். நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்காமல், அவர்களை வெற்றிபெறச்செய்யவேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ராஜபக்ஷ குடும்பத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உள்ளடங்கலாக அக்குடும்பத்தைப் பாதுகாப்பவர்களின் கூட்டணியின் என்னை இணையுமாறு கோரவேண்டாம். அதனைச்செய்வதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை.

ஆனால் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழித்து, அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவதன் மூலம் நாட்டுமக்களுக்கு சேவையாற்ற நான் தயாராக இருக்கின்றேன். புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கும், அரசியல் பயணத்திற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22