சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப்பதவியை ஏற்றமை மத்திய குழுவின் தீர்மானத்திற்கு முரணானது - மைத்திரி

Published By: Vishnu

24 May, 2022 | 08:34 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுப்பதவியை ஏற்றுள்ளமையானத மத்திய குழுவின் தீர்மானத்திற்கு முரணானதாகும்.

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் மற்றும் அது செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள போதிலும் , தற்போது சம்பிரதாய பூர்வ அரசாங்கமே அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சு.க. உறுப்பினர்களான மஹிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால அமைச்சுப்பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின் தீர்மானம் தற்போதைய அரசாங்கத்தினுள் அமைச்சுப்பதவிகள் எவற்றையும் ஏற்காது , பொது மக்களின் நன்மைக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்காக எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு பாராளுமன்றத்தினுள்ளும் அதற்கு வெளியிலும் ஒத்துழைப்பினை வழங்குவதாகும்.

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் மற்றும் அது செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் பரந்துபட்ட தெளிவுபடுத்தல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைமையை பாராளுமன்றத்தில் பெரும்பாலான கட்சிகளும் , தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளன. அத்தோடு மகா சங்கத்தினர் , சட்டத்தரணிகள் சங்கம் , சிவில் அமைப்புக்கள் , வர்த்தக சமூகம் மற்றும் சர்வதேச சமூகம் என்பவை கூட அதனை ஏற்றுக் கொண்டுள்ளன.

நாட்டுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இவ்வாறானதொரு யோசனையை முன்வைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் , பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்காது மீண்டும் சம்பிரதாயபூர்வ அரசாங்கத்தை அமைத்து , சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்கியுள்ளமை கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு முரணானதாகும்.

குறித்த உறுப்பினர்கள் அமைச்சுப்பதவியை ஏற்றுக் கொள்வதற்கு சு.க. மத்திய குழு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41