தமி­ழர்­களின் பிரச்­சி­னை­யையும் தேசிய பாது­காப்­பையும் தொடர்­பு­ப­டுத்­தக்­கூ­டாது

23 Dec, 2015 | 09:05 AM
image

 

யுத்­தத்­திற்கு பின்னர் வடக்­கிலும் கிழக்­கிலும் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­தி­யி­ருந்தால் இன்று விசே­ட­மாக அப்­ப­கு­தி­களை கவ­னத்­திற்­கொள்ள வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­காது. தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்று கொடுப்­பதே இன்று எமக்கு மிக முக்­கிய கட­மை­யாக உள்­ளது என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

தமிழ் மக்­களின் கோரிக்­கை­க­ளையும் தேசிய பாது­காப்­பையும் தொடர்­பு­ப­டுத்தி இன­வாதம் பேச வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்­கிலும் கிழக்­கிலும் மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கைகள் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லா­னது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ள நிலையில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்;

வடக்­கிலும் கிழக்­கிலும் அர­சாங்கம் மேற்­கொண்டு வரும் செயற்­பா­டு­களை அனை­வரும் வர­வேற்­கின்­றனர். கடந்த காலத்தில் அர­சாங்கம் தமிழ்ப் பிர­தே­சங்­களை சரி­யாக கவ­னத்திற் கொள்­ளாத நிலையில் இன்று ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஜன­நா­யக செயற்­பா­டு­களைச் சரி­யாகக் கையாண்டு வரு­கின்­றனர் எனவும் எமது செயற்­பா­டு­களில் குறை கண்டு விமர்­சிக்­க­வென்றே ஒரு அணி­யினர் இயங்கிக் கொண்­டுள்­ளனர்.

கடந்த காலத்தில் குறிப்­பாக யுத்­தத்தின் பின்னர் வடக்­கையும் கிழக்­கையும் கவ­னத்திற் கொண்டு அப்­ப­குதி மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களைக் கருத்தில் கொண்டு பூர்த்தி செய்­தி­ருந்தால் இன்று நாம் விசே­ட­மாக அவர்­களை கவ­னத்­திற்­கொள்ள வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­காது. ஆனால் யுத்தம் முடி­விற்கு வந்­த­வுடன் இலங்­கையில் தமி­ழர்கள் வாழ்­கின்­றனர் என்­ப­தையே மஹிந்த அர­சாங்கம் மறந்­து­விட்­டது.

ஆகவே இன்று தமிழ் மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்­டிய மிகப் பெரிய தேவை உள்­ளது. பொது மக்­க­ளிடம் இருந்து அப­க­ரித்த நிலங்­களை மீண்டும் அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க வேண்டும். அவர்­க­ளுக்­கான தொழில் வாய்ப்­பு­களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். வடக்­கிலும் கிழக்­கிலும் பாட­சா­லை­களை சீர­மைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோல் அவர்கள் உரி­மை­களை பெற்றுக் கொடுப்­பது அர­சாங்­கத்தின் மிக முக்­கிய செயற்­பா­டாகும். அன்று அர­சாங்கம் இந்த விட­யங்­களைச் செய்யத் தவ­றி­ய­மையே இன்­று­வரை நாம் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு பதில் கூற வேண்­டிய நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆகவே இப்­போது அர­சாங்கம் மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களை விமர்­சிக்கும் நபர்கள் தான் இன்று நாடு சிக்­கலை எதிர்­கொள்ள கார­ண­மா­ன­வர்கள் என்­பதை மறந்­து­விடக் கூடாது.

அதேபோல் இன­வா­தத்தில் அர­சியல் செய்­ப­வர்­க­ளுக்கு ஜன­நா­யகம் என்ற பாதை கடி­ன­மா­ன­தா­கவே இருக்கும். ஆகவே மஹிந்த அணி­யினர் இன்னும் தமது நிலைப்பாட்டில் இருந்து மாறாது செயற்பட்டு வருகின்றனர். இப்போதும் இனவாதம் பேசி மக்களின் ஒற்றுமையினை சீர்குலைத்துவிட வேண்டாம் என்பதையே இவர்களுக்கு கூற விரும்புகின்றோம். இந்த அரசாங்கம் இனவாதம் இல்லாது மூவின மக்களையும் ஒன்றிணைத்தே பயணிக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07