எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பு

Published By: Vishnu

24 May, 2022 | 02:36 PM
image

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேட  ரோந்து பணிகள் ஊடாக  கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திட்டமிட்ட வகையில் பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் அநாவசிய குழப்பங்களை ஏற்படுத்த இவர்கள் செயற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களின்

பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, இவ் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுத்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மோதல் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் உடனடியாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அநாவசிய குழப்ப நிலைகளினால் வீதிகள் மூடப்பட்டு பெரும் பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இவ்வாறு வீதிகள் மூடப்படுவதால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உட்பட வீதிகளில் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

எனவே இவ்வாறான போராட்டங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45