மகளிர் ரி - 20 செலஞ் கிரிக்கெட் போட்டியில் சுப்பர்நோவாஸுக்கு முதல் வெற்றி

Published By: Digital Desk 5

24 May, 2022 | 08:56 AM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவில் திங்கட்கிழமை (23) ஆரம்பமான 3 அணிகளுக்கு இடையிலான மகளிர் ரி 20 செலஞ் கிரிக்கெட் போட்டியில் சுப்பர்நோவாஸ் முதலாவது வெற்றியை ஈட்டியது.

Women's T20 Challenge: Supernovas crush Trailblazers by 49 runs to register  biggest win in tournament history | Cricket News | Zee News

ட்ரெய்ல்ப்ளேஸர்ஸுக்கு எதிராக புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சகல  துறைகளிலும்   திறமையை வெளிப்படுத்திய சுப்பர்நோவாஸ் 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சுப்பர்நோவாஸ் வீராங்கனைகளின் 'சுப்பரான' பிடி எடுப்புகள் இந்த வெற்றியில் பிரதான பங்காற்றின என்று கூறினால் மிகையாகாது. மிகவும் சிரமமான  ஒரே ஒரு   பிடியைத் தவிர மற்றைய சிரமமான பிடிகள் அனைத்தையும் சுப்பர்நோவாஸ் வீராங்கனைகள் தாவிப் பிடித்தமை பிரமிக்கவைத்தன.

Pooja Vastrakar Stars As Supernovas Defeat Trailblazers By 49 Runs In  Women's T20 Challenge Opener | Cricket News

அப் போட்டியில் சுப்பர்நோவாஸினால் நிர்ணயிக்கப்பட்ட 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தானா (34), ஹெய்லி மெத்யூஸ் (14) ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து   நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து ஜெமிமா ரொட்றிகஸ் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

Women's T20 Challenge 2022: Supernovas beat Trailblazers by 49 runs in  opening match | Cricket News – India TV

எவ்வாறாயினும் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்த ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் தோல்வியைத் தழுவியது.

10ஆம் இலக்க வீரர்ங்கனை ரேணுகா சிங் (14 ஆ.இ.), ராஜேஷ்வரி கய்க்வாட் (7 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 20 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் 100 ஓட்டங்களைக் கடந்திருக்காது.

சுப்பர்நோவாஸ் அணியில் பிரியா பூணியா, ஹார்லீன் டியோல் ஆகிய இருவரும் முன்னோக்கிப் பாய்ந்து தலா 2  சிரமமான பிடிகளை எடுத்தமை பிரமிக்கவைத்தன.

பந்துவீச்சில் பூஜா வஸ்த்ரேக்கார் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சொபியா எக்லஸ்டோன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலனா கிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Pooja Vastrakar shines as Supernovas beat Trailblazers by 49 runs in Women's  T20 Challenge opener - Sports News

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த சுப்பர்நோவாஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

பிரியா பூணியா (22), டியேந்த்ர டொட்டின் (17 பந்துகளில் 32) ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.  டொட்டின் அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.

13 ஓட்டங்கள் கழித்து பிரியா பூணியா ஆட்டமிழந்தார்.

துடுப்பாட்டத்தில் ஹார்லீன் டியோல் (19 பந்துகளில் 35), அணித் தலைவர் ஹார்மன்ப்ரீத் கோர் (37), சுனே லூயிஸ் (10), பூஜா வஸ்த்ரேக்கார் (14) ஆகியோரும் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் ஹெய்லி மெத்யூஸ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சல்மா காத்துன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22