வெளிநாட்டு தொழிலாளர்களிடம் அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ள வேண்டுகோள்

Published By: Vishnu

23 May, 2022 | 09:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து மாதத்துக்கு 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் வரிசை யுகத்துக்கு தீர்வுகாண முடியும்.

அதனால் வெளிநாட்டு தொழிலாளர்கள் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப 500டொலர் மிலலியனின் பங்காளியாக முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவய்ப்பு பணியகத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டுக்கு டொலர் பெற்றுக்கொடுக்க யாரும் முன்வராத நிலையில், அந்த பாெறுப்பையும் சவாலையும் நாங்கள் ஏற்றுககொண்டுள்ளோம்.

எமது அரசியல் வாழ்க்கையின் எதிர்காலத்தையும் கருத்திற்கொள்ளாமலே இந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். குறிப்பாக நாட்டுக்கு டொலர் பெற்றுக்கொடுக்க கூடிய நிறுவனம்தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்.

அத்துடன் நாட்டில் தற்போது தட்டுப்பாடாகி இருக்கும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள எவ்வளவு தொகை பணம் தேவைப்படுகின்றது என மத்திய வங்கி ஆளுநருடன் தொடர்பு கொண்டடு நாங்கள் கேட்டோம்.

அதற்கு அவர் தெரிவித்த விடயம்தான், ஏனைய வழிகளில் வரும் டொலர்களைத் தவிர, வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து மாதத்துக்கு குறைந்தது 500மில்லியன் டொலர் பெற்றுத்தர முடியுமாக இருந்தால்.

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள், காஸ். மின்துண்டிப்பு, மருந்து தட்டுப்பாடு போன்றவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் வரிசை யுகத்தை இல்லாமலாக்க முடியும் என குறிப்பிட்டார்.

அதனால் தற்போது மாதத்துக்கு 300மில்லியன் டொலர்வரை இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் டொலர் வருகையை 500மில்லியன் டொலர்வரை அதிகரிக்கவேண்டி இருக்கின்றது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் டொலர் அனுப்புவதாக இருந்தால் அவர்கள் நிவாரணம் கோரி இருக்கின்றார்கள். நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவாலை வெற்றிகொள்ள அவர்கள் தயார் என பலரும் எம்முடன் தொடர்புகொண்டு தெரிவித்து வருகின்றனர்.

அதனால் இலங்கையில் இருப்பவர்களில் யாராவது வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் இருந்தால். அவர்களுக்கு இதுதொடர்பாக எடுத்துக்கூறி, 500டொலர் மில்லியனின் பங்காளியாகுமாறு தெரிவிக்கவேண்டும்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நியம முறையில் வங்கி ஊடாக  அனுப்பும் டொலர் பெறுமதிக்கு அமைய பல நிவாரணங்களை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

குறிப்பாக ஒரு வருடத்துக்கு ஒரு இலட்சம்மில்லியன் டொலர் அனுப்பினால் அவர்களுக்கு வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல். வரி நிவாரணம், குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதி, 50ஆயிரம் மில்லியன் டொலர் அனுப்பியிருந்தால் அவர்களின் பிள்ளைகளை உயர் பாடசாலைகளுக்கு அனுமதித்துக்கொள்வதற்கான புள்ளி வழங்கு முறை ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கின்றோம். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருக்கின்றோம்.

அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை அட்டை ஒன்றை வழங்குவதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த சலிகை அட்டை மூலம் நிவாரண அடிப்படையில் கட்டுமான பொருட்கள், வீட்டு தளபாடங்கள் மற்றும் பல பொருட்களை பெற்றுக்கொள்ள பல நிறுவனங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றோம். 

அதேபோன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு வரும்போது சிரமின்றி வருவதற்கு விமான நிலையத்தில் அவர்களுக்கு விசேட கருமபீடம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றோம்.

அவர்கள் ஏதாவது பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அதுதொடர்பில் 0777442500 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் ஊடாக குரல் பதிவொன்றை பதிவு செய்தால், அதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01