இராணு கூட்டுப்படையின் தளபதியாக உபய மெடவல நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இராணு கூட்டுப்படையின் பிரதி தலைவராக மேஜர் ஜெனரல் சன்னா குணதிலக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் எதிர்வரும்  நவம்பர் முதலாம் திகதிமுதல் கடமைகளை பொறுப்பேற்பர் என பாதுகாப்பு தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  விமானப்படையின் கூட்டுப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.