தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரேரணை குறித்து கனேடிய பதில் உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் பீரிஸ் தெரிவித்ததென்ன?

Published By: Digital Desk 3

23 May, 2022 | 08:49 AM
image

(எம்.மனோசித்ரா)

கனேடியப் பாராளுமன்றத்தில் நினைவேற்றப்பட்ட மே 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தும் பிரேரணையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்காக கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் அமெண்டா ஸ்ட்ரோஹானுடனான சந்திப்பின் போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கனேடிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக்க கூறப்படும் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுதியான எதிர்ப்பினையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறித்த பிரேரணையின் அப்பட்டமான பொய்யான உள்ளடக்கத்தை திட்டவட்டமாக நிராகரிக்கின்றோம். இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கண்டறியப்படவில்லை. 

சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழிநுட்ப சொற்களை எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த பிரேரணையின் தவறான மற்றும் பாரபட்சமான தன்மை , இதன் விளைவாக பொது களத்தில் உருவாகியுள்ள இலங்கை மீதான எதிர்மறையான கருத்துக்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு , பிரேரணையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இலங்கைக்கும் கனடாவுக்குமிடையில் 6 தசாப்தத்திற்கும் மேலாக நீடித்து வரும் வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியில் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்று பதில் உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் போது அமைச்சரின் கோரிக்கைக்கு பதிலளித்த கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் , கனடாவின் நாடாளுமன்ற பொதுச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணையின் கட்டுப்பாடற்ற சட்டமியற்றும் தன்மையைக் குறிப்பிட்டார். 

தகுந்த நடவடிக்கைக்காக அரசியல் முன்முயற்சியின் உள்ளடக்கத்தினை கனடாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி திணைக்களத்திற்கு தெரிவிக்கவும் அவர் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21