நெருக்கடி நேரத்தில் இந்தியாவின் மனிதாபிமான உதவிகளை வரவேற்கின்றோம் - அமைச்சர் ஜி.எல் பீரிஸ்

Published By: Digital Desk 4

22 May, 2022 | 10:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் இந்தியாவினால் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் வரவேற்கத்தக்கது.

கிடைக்கப்பெற்றுள்ள நிவாரணம் இலங்கையர்கள் அனைவருக்கும் சென்றடையும். இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

No description available.

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்கள் அடங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.நிவாரண பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் கையளித்தார்.

சுமார் 2 பில்லியன் பெறுமதியிலான நிவாரண பொருட்களை இந்திய மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.இலங்கைக்கும்,இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான உறவு பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No description available.

இலங்கை பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் இந்தியாவினால் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் வரவேற்கத்தகன.எதிர்வரும் வாரமளவில் மேலும் ஒரு தொகை நிவாரண பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் கிடைக்கப்பெறும்.

கிடைக்கப்பெற்றுள்ள நிவாரண பொருட்கள் இலங்கை மக்கள் அனைவருக்கும் விரைவாக பகிர்ந்தளிக்கப்படும்.அரச கட்டமைப்பின் கீழான நிறுவனங்கள் ஊடாக துரிதமாக பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.

நிவாரண பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் துறைமுகம் மற்றும் கப்பற்துறை,சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்,இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான வஜிர அபேவர்தன,சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53