நுவரெலியாவில் பொலிஸ் பாதுகாப்புடன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் 

Published By: Digital Desk 4

22 May, 2022 | 12:47 PM
image

நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சுமார் 20 நாட்களுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) திகதி நுவரெலியா பிரதான நகரிலும் , களஞ்சிய சாலையிலும் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பொது  மக்களுக்கு சீராக வழங்கப்பட்டது 

லிட்ரோ எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து செல்லப்பட்டு  சுமார் 500 இற்கும் அதிகமான  சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா , பொரலாந்த , ஹாவஎலிய, பிலக்பூல்,ஸ்கிராப், பம்பரகலை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது 

எரிவாயுக் கொள்வனவு செய்ய அதிகமான  பொதுமக்கள் வருகை தந்த நிலையில் நுவரெலியா பொலிஸாரின் பாதுகாப்புடன் எரிவாயு வினியோகம் இடம்பெற்றது.

இந்த எரிவாயுக் கொள்வனவில் ஆண்கள், பெண்கள் என  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியில் இருந்து  காத்திருந்து 8 மணியளவில் பெற்றுச் சென்றதைக் காணமுடிந்ததுடன், பல தனியார் துறைகளில் வேலை செய்பவர்  விடுமுறையில் வந்து சிலிண்டர்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது. இதில் அதிகமாக நுவரெலியா பிரதான நகரில் ஹோட்டல் உரிமையாளர்களின் நலன் கருதி தெரிவு செய்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32