தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஷ் தெரிவித்தார். 

அத்துடன் இதற்கு பதிலாக நவம்பர் மாதம்  முதல் சனிக்கிழமையன்று (05.11.2016) கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று  சகல அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்  மத்திய மாகாண அமைச்சர் ம. ரமேஷ் தெரிவித்தார்.