லிட்ரோ நிறுவனத்திற்கு கோப் குழு விடுத்துள்ள ஆலோசனை

Published By: Digital Desk 3

21 May, 2022 | 10:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாளாந்த சமையல் எரிவாயு  சிலிண்டர்  விநியோகத்தில் 60 சதவீதத்தை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு விநியோகிக்குமாறு கோப்  தலைவர் பேராசியிரியர் சரித ஹேரத் லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவத்தினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு எரிவாயு சிலிண்டரை தவிர வேறு மாற்று வழிமுறைகள் எதும் இல்லாத காரணத்தினால் எதிர்வரும் வாரத்திற்குள் சிலிண்டர் விநியோகத்தில் இவ்விரு  மாவட்டங்களுக்கு  முன்னுரிமை வழங்குமாறும், இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எதிர்வரும் இருவார காலத்திற்குள் தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்ய துரிதகர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  கோப் குழு  லிட்ரோ நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

எரிவாயு விநியோக கட்டமைப்பில் நிலவும் சிக்கல் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து ,அடுத்தக்கட்ட தீர்மானங்களை முன்னெடுக்கும் நோக்கில் லிட்ரோ நிறுவனத்தினர் நேற்று முன்தினம் கோப்குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.

எரிவாயு கொள்முதல் தாமதத்தினால் தற்போது சுமார் 35 இலட்ச எரிவாயு சிலிண்டர்களுக்கு கேள்வி நிலை காணப்படுகிறது.

நாடு தழுவிய ரீதியில் உள்ள 42 பிரதான விநியோக பிரதிநிதிகள் ஊடாகவும்,உப விநியோகஷ்தர்கள் ஊடாகவும் தற்போது நாடு தழுவிய ரீதியில் 80ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் கோப் குழுவில் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் கடந்த ஓரிரு நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக முத்துராஜவெல முனையத்தில் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தடைப்பட்டதை தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக தரையிறக்கல் மற்றும் விநியோக நடவடிக்ககைளை முன்னெடுக்க தீர்மானித்தால் எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே எதிர்வரும் நாட்களில் தாமதமில்லாமல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கோப் குழுவில் எடுத்துரைத்தார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிவாயு கொள்வனவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 160 மில்லியன் அமெரிக்க டொலர்களில் லிட்ரோ நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் 120மில்லியன் டொலர் ஊடாக  எரிவாயு கொள்வனவிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஊடாக 3 மாத காலத்திற்கு தேவையான எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய  இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எதிர்வரும் இருவார காலத்திற்குள் எரிவாயுவை துரிதரகமாக பெற்றுக்கொள்ளவும்,எரிவாயு விநியோக கட்டமைப்பில் நிலவும் சிக்கல் நிலைக்கு தீர்வு காணவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  கோப் குழு லிட்ரோ நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் லிட்ரோ நிறுவனத்திற்கு கூட்டுத்தாபனத்தின் கையிறுப்பின் ஊடாக தற்போதைய நிலைமையில் ஏதேனும் ஒத்துழைப்பு வழங்க முடியுமா என்பது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு கோப்குழு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கும்,நிதியமைச்சின் செயலாளருக்கும் பரிந்துரைத்தது.

எரிவாயு விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையினால் எரிவாயு பெறுகைக்கான வரிசை நீண்ட நிலையில் உள்ளது.எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்த லிட்ரோ நிறுவனம் இலத்திரனியல் முறைமை,அல்லது தொலைப்பேசி ஊடாக பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறித்த விற்பனை முகவர் ஊடாக ஒரு நாளைக்கு இத்தனை எரிவாயு சிலிண்டர்கள் தான் விநியோகிக்கப்படும் என்பது உறுதியாக குறிப்பிடப்படும் பட்சத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படாது என கோப் குழுவின் தலைவர் லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதும் தேசிய மட்டத்தில் எரிவாயுவின் விலை உரிய முறையில் அதிகரிக்கப்படாத காரணத்தினால் லிட்ரோ நிறுவனம் நட்டமடைந்துள்ளது. 2021 ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் நிறுவனத்தின் வசமிருந்த 15 பில்லியன் கையிருப்பு செலவாகியுள்ளதுடன், 11 பில்லியன் நிதி வங்கிகளில் இருந்து கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதி உயர்வினால் ஏற்பட்ட டொலர் நெருக்கடி,தவணை விலைமனுகோரல்,கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதிக்கு பின்னர் புதிய விலைமனுகோரல் தாமதப்படுத்தப்பட்டமை எரிவாயு கொள்வனவிலும்,விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என லிட்ரோ நிறுவன தலைவர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலை அதிகரிப்பதற்கும்,விலை குறைவடையும் போது அதனூடாக பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் பொருத்தமான எரிவாயு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் அவசியம் குறித்து கோப் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58