கிளிநொச்சி பிரச்சினை ; பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது

Published By: Raam

26 Oct, 2016 | 07:57 PM
image

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப்  பகுதியில்  பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டத்தையடுத்து பெரும் பதற்றம் ஏற்ப்பட்டிருந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்டு காயமடைந்த பொலிஸ்  உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு  அனுராதபுரம் வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தர்மபுரம் கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவரை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைந்து இன்று  பிற்பகல்  கட்டைக்கடுப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேகநபரை வைத்திய பரிசோதனையின் பின்  கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியத்தை அடுத்து குறித்த சந்தேக நபரை  எதிர்வரும் 31 ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10