மே 18 ஐ தமிழினப் படுகொலை நினைவு நாளாக கனேடிய பாராளுமன்றம் பிரகடனப்படுத்தியதை இலங்கை நிராகரிப்பு

Published By: Digital Desk 5

20 May, 2022 | 03:12 PM
image

(நா.தனுஜா)

கனேடியப்பாராளுமன்றத்தில் நினைவேற்றப்பட்ட மே 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் தொடர்பில் கவலையடைவதாகவும், கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டவகையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றிருப்பதாக அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No description available.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று கனேடியப் பாராளுமன்றத்தில் மே 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இதுகுறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் தமிழினப்படுகொலை மற்றும் மே 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தல் ஆகியன தொடர்பில் கனேடியப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கவலையடைகின்றோம். 

'இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கண்டறியப்படவில்லை' என்ற கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபடக்கூடியவகையில், கனேடியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகப் பொய்யான குற்றச்சாட்டு உள்ளடக்கப்பட்டுள்ளமையினை முழுமையாக நிராகரிக்கின்றோம்.

No description available.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு உரியவாறான நடவடிக்கைளை முன்னெடுத்த அதேவேளை, யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களிலிருந்த தமது பிரஜைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளடங்கலாக இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையின் உண்மை நிலைவரம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கனேடிய அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்களை இப்போது நினைவூட்டுகின்றோம். 

போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு 13 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இன்றளவிலே நல்லிணக்கத்தை உறுதிசெய்வதில் இலங்கை குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

'இனப்படுகொலை' என்ற சொற்பதம் சட்டரீதியாகக் குறிப்பிடத்தக்கவொரு அர்த்தத்தைக் கொண்டிருப்பதுடன், அந்தச் சொற்பதம் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புபட்டவகையில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம். 

மாறாக புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற அரசியல் ரீதியில் தூண்டுதலளிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான சக்திகளே இந்தச் சொற்பதத்தைத் தன்னிச்சையான முறையில் பயன்படுத்திவருவதை அவதானிக்கமுடிகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கை மக்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் சர்வதேச சமூகத்தின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களை எதிர்பார்த்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இத்தகைய தவறான நடவடிக்கை கனேடியப்பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருப்பது கவலையளிக்கின்றது என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46