அமைச்சுப் பதவிகளை பெற்ற எதிர்க்கட்சி  உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - கிரியெல்ல

Published By: Digital Desk 5

20 May, 2022 | 12:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அமைச்சுப் பதவிகளை பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

Open photo

பாராளுமன்றத்தில் (20)வேள்ளிக்கிழமை ஆளும் கட்சி உறுப்பினர் சாந்த பண்டார கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அமைச்சரவையில் இணைந்துகொண்டிருப்பதை வரவேற்பதாக தெரிவித்ததற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தில் இணைந்துகொள்வது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கை அல்ல. 

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, அரசாங்கத்தின்  நல்ல தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்தோம்.

இதுதொடர்பில் எழுத்து மூலம் அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கின்றோம்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் வைத்தியசாலைகளுக்கான மூச்சு வேலைத்திட்டம் ஊடாக வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாகி வரும் அத்தியாவசிய இரண்டு பொருட்களை பெற்றுக்கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையில் அறிவித்திருந்தார்.

அத்துடன் ஏற்கனவே இந்த வேலைத்திட்டம் மூலம் நாட்டின் பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.

என்றாலும் தற்போது எமது கட்சியில் இருந்து சிலரை பெற்றுக்கொண்டு அமைச்சு பதவி வழங்கி இருக்கின்றது. இவ்வாறு கட்சியில் இருந்து சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46