இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

Published By: Digital Desk 4

19 May, 2022 | 10:34 PM
image

(என்.வீ.ஏ.)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சட்டாக்ராம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி இன்று வியாழக்கிழமை (19) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

Dinesh Chandimal and Niroshan Dickwella had to dig deep to rescue Sri Lanka, Bangladesh vs Sri Lanka, 1st Test, Chattogram, 5th day, May 19, 2022

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷை விட 68 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை, நான்காம் நாளான புதன்கிழமை (18)  ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் கடைசி நாளான இன்று தனது 2ஆவது இன்னிங்ஸை இக்காட்டன நிலையில் தொடர்ந்த இலங்கை, நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்ததிருந்தபோது குசல் மெண்டிஸ் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார். (106 - 3 விக்.)

மேலும் 4 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது முதல் இன்னிங்ஸ் ஹீரோ ஏஞ்சலோ மெத்யூஸ் ஓட்டம் பெறாமலேயே களம் விட்டகன்றார். (110 - 4 விக்.)

திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த திமுத் கருணாரட்ன (52), தனஞ்சய டி சில்வா (33) ஆகிய இருவரும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (161 - 6 விக்.)

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் (38 ஆ.), நிரோஷன் திக்வெல்ல (61 ஆ.இ.) ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7 ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப் போட்டியின் எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: 397 (ஏஞ்சலோ மெத்யூஸ் 199, தினேஷ் சந்திமால் 66, குசல் மெண்டிஸ் 54, நயீம் ஹசன் 105 - 6 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: 465 (தமிம் இக்பால் 133, முஷ்பிக்குர் ரஹிம் 105, லிட்டன் தாஸ் 88, மஹ்முதுல் ஹசன் ஜோய் 58, கசுன் ராஜத்த 60 - 4 விக்., அசித்த பெர்னாண்டோ 72 - 3 விக்.)

இலங்கை 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது 260 - 6 விக். (நிரோஷன் திக்வெல்ல 61 ஆ.இ., திமுத் கருணாரட்ன 52, தினேஷ் சந்திமால் 39 ஆ.இ., தய்ஜுல் இஸ்லாம் 82 - 4 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31