பதற்றம் ; அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

Published By: Digital Desk 3

19 May, 2022 | 08:21 PM
image

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணியானது கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் இன்று (19)  ஆரம்பமாகி ஜனாதிபதி மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி உலக வர்த்தக மைய வளாகப்பகுதியை நெருக்கிய நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் பேரணி நகராத வகையில் தடையை ஏற்படுத்தியிருந்தனர்.

குறித்த பதியில் வைத்து ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No description available.

இந்நிலையில் பொலிஸாரின் தடையை உடைத்துக்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் முன்நோக்கிச் செல்ல முயற்சிப்பதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 'கோட்டா - ரணில் சூழ்ச்சி அரசாங்கத்தை தோற்கடிப்போம் - இந்த முறைமையை வீழ்த்துவோம்' என்ற தொனிப்பொருளிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் கொழும்பு அழகியல் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மதியம் 2 மணியளவில் ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு சில வீதிகளுக்கு பிரவேசிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததையடுத்து இவர்கள் மருதானையூடாக கோட்டை புகையிரத நிலையத்திற்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தின் தடையுத்தரவு தொடர்பில் பொலிஸார் விளக்கமளிக்க முற்பட்ட போதிலும் , ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களைக் கடந்து முன்னோக்கிச் செல்வதற்கு முயற்சித்தனர்.

இதன் போது உலக வர்த்தக மைய வளாகத்திலிருந்து நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கிச் செல்ல முற்பட்டதோடு , அப்பகுதியில் பொலிஸாரினால் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடைகளையும் தகர்த்து வீழ்த்தினர். இதனையடுத்து பொலிஸாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் சிறிது நேரத்தின் பின்னர் தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் நீர்தாரை வாகனங்களின் மீதேறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவற்றின் கண்ணாடிகளில் பதாதைகளை ஒட்டி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். அதனையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாதுகாப்பிற்காக பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.  

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர், அதன் அங்கத்தவர்கள் மற்றும் வேறு நபர்களுக்கும் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும் கோட்டை பொலிஸ் பிரிவில் எந்தவொரு அரச நிறுவனத்திற்குள் , உத்தியோகபூர்வ இல்லங்களுக்குள் நுழைதல், சேதப்படுத்தல், அந்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விழைவித்தல், வன்முறை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்தோடு ஜனாதிபதி வீதி, யோர்க் வீதி, வங்கி வீதி, கீழ் ஷதம் வீதி, முதலிகே வீதி மற்றும் வைத்தியசாலை வீதி என்பவற்றுக்குள் பிரவேசிப்பதற்கும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதே வேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கக் கூடிய வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் இடமளிக்காது அவர்களை வழிமறித்து அங்கு பதற்றமானதொரு சூழலை உருவாக்குவதற்கு இன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்ததாக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கொழும்பு - புதுக்கடை இலக்கம் 4 நீதவான் நீதமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வீதிகளில் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று  வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கோரப்பட்டிருந்தது. இக் கோரிக்கைக்கு அமைய பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற நுழைவு வரையான வீதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உபயோகிக்கும் வீதிகளில் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு புதுக்கடை இலக்கம் 4 நீதவான் நீதமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறித்த உத்தரவு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட மேலும் 10 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51