(கா.சந்திரன்)

பசுமை பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் பாரிய  கண்டன ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த  கண்டன  ஆர்ப்பாட்டத்தில் நாட்டின்  சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  சுமார் 400 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது  பசுமை பல்கலைக்கழகத்தை உடனடியாக ரத்து செய் , நாட்டின் மாணவர்கள் , பல்கலை கழக மாணவர்கள் நடு வீதியில் , பசுமை பல்கலைக்கழகம் எமக்கு வேண்டாம் , கல்வி எம் உரிமை , கல்வியை விற்பனை செய்வதை உடன் நிறுத்து , இலவச கல்வி மற்றும் நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட ஒன்றிணைவோம்  , கல்வி ,  நல்லாட்சி அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக விற்கப்படுகின்றது , பணம் கொடுத்து கல்வி கற்க நாம் எங்கே போவது , நாட்டின் சுதந்திரம் இல்லாமல் செய்யப்படுகிறது , கல்வி எம் உரிமை , எம்மை கல்வியை சுதந்திரமாக கற்க விடு , கல்வி சீர்திருத்தத்தில் குற்றங்கள் , குளறுபடிகள் அதிகம் , நாட்டின் 04 பக்கம் வற் வரி , கல்வியை விற்பனை செய்வதை நாம் ஒரு போதும் பொறுத்துக் கொள்ளோம் , கல்வி விற்பனை செய்யப்பட்டால் எம் பாதையில் நாம் செல்வோம் போன்ற எதிர்ப்பு பதாகைகள்   காட்சியப்படுத்தப்பட்டிருந்தவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.