20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

19 May, 2022 | 08:11 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் புதன்கிழமை (18) மாலை நடைபெற்ற 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் கடும் சவாலை முறியடித்து 71 - 61 என்ற புள்ளிகள் கணக்கில் புனித பேதுருவானவர் வெற்றிபெற்றது.

இடைவேளையின்போது 27 - 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் டி.எஸ். சேனாநாயக்க முன்னிலையில் இருந்தது.

போட்டியின் 1ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் டி.எஸ்.எஸ். 17 - 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

2ஆவது கால் மணி ஆட்டத்தை 14 - 10 என புனித பேதுருவானவர் தனதாக்கிய போதிலும் இடைவேளையின்போது 27 - 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் டி.எஸ்.எஸ். முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய புனித பேதுருவானவர் 3ஆவது ஆட்டநேர பகுதியை 22 - 14 என தனதாக்கி 47 - 41 என முன்னிலை வகித்தது.

கடைசி கால் மணி நேர ஆட்டத்திலும் திறமையை வெளிப்படுத்திய புனித பேதுருவானவர் அப் பகுதியை 24 - 20 என தனதாக்கி 71 - 61 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3ஆம் இடத்தை உறுதிசெய்துகொண்டது.

இதேவேளை, ஏ பிரிவு பெண்களுக்கான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மட கல்லூரியை 36 - 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட நுகேகொடை புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி 3ஆம் இடத்தை தனதாக்கிக்கொண்டது.

பி பிரிவு ஆண்களுக்கான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் வெஸ்லி கல்லூரியை 72 - 55 என்ற புள்ளிகள் அடிப்படையில் கலம்போ இன்டர்நெஷனல் ஸ்கூல் வெற்றிகொண்டு  3ஆம் இடத்தைப் பெற்றது.

இன்றைய தினம் ஏ, பி, சி ஆகிய 3 பிரவுகளில் இருபாலாருக்குமான 6 இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இன்று வியாழக்கிழமை (19) காலை நடைபெறும் சி பிரிவு பெண்களுக்கான இறுதிப் போட்டியில் யசோதராதேவி மகளிர் பாடசாலையும் குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் கல்லூரியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

தொடரும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் அம்பலாங்கொடை தர்மாஷோக்க கல்லூரியும் விளையாடவுள்ளன.

பி பிரிவு பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கொழும்பு மகளிர் கல்லூரியும் கண்டி ஹில்வூட் கல்லூரியும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் வத்தளை ஓ கே சர்வதேச பாடசாலையும் இஸிபத்தன கல்லூரியும் பங்குபற்றவுள்ளன.

ஏ பிரிவில் இருபாலாருக்குமான இறுதிப் போட்டிகள் நாளை பிற்பகல் 1.50 மணியிலிருந்து நடைபெறும்.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் கல்லூரியை கண்டி மஹமாயா கல்லூரி சந்திக்கவுள்ளது.

தொடரும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியை கொழும்பு றோயல் கல்லூரி எதிர்த்தாடும்.

ஏ பிரிவு இறுதிப் போடடிகள் முடிவடைந்த பின்னர் பரிசளிப்பு வைபவம் நடைபெறும்.

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு இந்த வருடம் கஜா ஹோல்டிங்ஸ் நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59