முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை சபையில்  நினைவு கூர்ந்த எம்.பி.க்கள்

Published By: Digital Desk 4

19 May, 2022 | 07:38 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான வினோ நோகர் இராதலிங்கம்,கோவிந்தன் கருணாகரன், மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள பரிந்துரை | Virakesari.lk

இதன்போது குறுக்கிட்ட ஆளும் தரப்பின் உறுப்பினர் 'இவர்களின் மொழி எமக்கு தெரியாது.

இருப்பினும் மொழிபெயர்ப்பு ஊடாக நந்திகடலில் உயிர்நீத்த விடுதலை புலிகள் போராளிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியதாக  அறிய முடிகிறது.

இது முற்றிலும் தவறானது. நாட்டை பாதுகாத்தவர்களை நினைவு கூரும் வேளையில் தீவிரவாதிகளை நினைவு கூர முடியாது, ஆகவே இவர்களின் செயற்பாட்டை ஹென்சாட்டில் இருந்து நீக்குங்கள் என சபை தலைவரிடம் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரேம்நாத் தொலவத்த கூட்டமைப்பின் உறுப்பினர் வினோநோகராதலிங்கத்தை நோக்கி,உங்களின் செயற்பாடு தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற் கொண்டு செல்லப்படும். தடைவிதிக்கும் அறிவுறுத்தலை தற்போது வழங்க முடியாது என குறிப்பிட்டார்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது கூட்டமைப்பின் உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பின்வருமாறு உரையாற்றினார்.

உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் உரிமையை தடுக்க முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி காலி முகத்திடலில் மக்கள் இன மத பேதமற்ற முறையில் அனுஷ்டிக்கிறார்கள். அதே போல் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் எம்மால் அவர்களை சபையில் நினைவு கூற முடிந்தது.

யுத்தகாலத்தில் தெற்கு அரசாங்கம் வடக்கிற்கு உணவு வழங்கலை தடுத்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் வெறும் உப்பு கஞ்சியை குடித்து உயிர் வாழ்ந்தார்கள்.

இந்த வேதனையை எடுத்துக்காட்டும் விதமாக நாடு தழுவிய ரீதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது.இராணுவத்தினர் அந்த கஞ்சியை வாங்கி குடித்து தங்களின் பாவத்தை நீக்கிக்கொள்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  நிகழ்வின் போது கஞ்சி வழங்கலை சகல இன மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

தற்போதைய நிலைமையினை கொண்டு இந்த ஒற்றுமையை மீண்டும் பிளவுப்படுத்த கூடாது.நாட்டில் தற்போது இடம்பெறும் வன்முறைகளை கடுமையாக கண்டிக்கிறோம்.

 வரலாற்றில் தமிழர்கள் பல வழிமுறைகளில் கொடுமைக்குள்ளாக்கபபட்டார்கள்.இவ்வாறான சூழ்நிலையை தற்போது கண்கூட காண்கிறோம்.தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக பாராளுமன்றில் எவ்வித வாதங்களும் இடம்பெறவில்லை.என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10