அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள கைதிகளும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் அழைப்பு - ஜே.வி.பி.

Published By: Digital Desk 3

18 May, 2022 | 09:07 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

காலி முகத்திடல் அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சிறைச்சாலை கைதிகளும், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மஹியங்கனை பகுதியில் யாசகம் பெற்ற நிலையில் இருந்தவர்களும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் தொடர்பு உண்டு என்ற தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஆளும் தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதை விடுத்து சுயாதீன விசாரணையை மேற்கொண்டால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (18) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கும்,மக்கள் விடுதலை முன்னணிக்கும் தொடர்பு உண்டு என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ கருத்துரைக்கிறார். வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பலமுறை சபையில் உரையாற்றியுள்ளேன்.

கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அமைதி காத்துள்ளோம்.பாராளுமன்றில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தததிற்கு முழுமையாக ஆதரவு வழங்கியுள்ளோம். ஜனநாயகத்திற்கு முரணாக செயற்பட்டவர்கள் தற்போது பாராளுமன்ற ஜனநாயகம் குறித்து கருத்துரைக்கிறார்கள்.

1983ஆம் ஆண்டு நாம் தொடர்புப்படாத கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்றது.திட்டமிட்ட வகையில் மக்கள் விடுதலை முன்னணி மீது தடை; விதிக்கப்பட்டது.ஜே.ஆர் ஜயவர்தன நடைமுறைப்படுத்திய பொருளாதார கொள்கைக்கும், 

ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக் கு எதிராக செயற்பட்டோம்.நாட்டு மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சகல செயற்பாடுகளுக்கும் எதிராக போராடுவோம்.

காலி முகத்திடல் தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் அநுராதபுரத்தில் 8 பேரும், தெனியாயவில் 3 பேரும், கம்யுறுபிடியவில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுங்கள்.

நாடுதழுவிய ரீதியில் உள்ள 184 பொலிஸ் நிலையங்களில் 2 பொலிஸ் நிலையங்களுக்கு மாத்திரம் தகைமை அடிப்படையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மிகுதி 182 பொலிஸ் நிலையங்களுக்கு அரசியல் நியமணம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கவும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிடின் தற்போதைய பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண முடியாது. மக்களின் எதிர்ப்பே போராட்டமாகவும்,வன்முறையாக வெளிப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குலை நடத்த குண்டர்களை கொண்டு வந்தது. யார்  சிறைக்கைதிகளும் தாக்குதலுக்காக கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.

தனக்கு இந்த தாக்குதலை நடத்த  வாய்ப்பிருந்தது. இருப்பினும் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோனையினால் அவற்றை செயற்படுத்தவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தொன்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

இதன்போது குறுப்பிட்ட முன்னாள் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் லொஹான் ரத்வத்தே 'வடரட்ட சிறைச்சாலை கைதிகளை தாக்குதலுக்காக கொண்டு வரவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன் 'என்றார்

லொஹான் ரத்வத்தே இன்னும் சிறைச்சாலை விவகாரத்துறை அiமைச்சர் என்பது எனக்கு தெரியாது. வடரட்ட சிறைச்சாலையின் கைதிகள் தாக்குதலுக்காக அழைத்து வரப்பட்டமை தொடர்பான தரவும்,தாக்குதலை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களின் தரவும் என்னிடம் உள்ளது.எவ்வாறு இல்லை என்று குறிப்பிட முடியும். திட்டமிட்ட வகையில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28