இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் இன்றும் நாளையும்

Published By: Digital Desk 5

18 May, 2022 | 04:58 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்ட இருபாலாருக்குமான கூடைப்பந்தாட்ட இறுதிக் கட்டப் போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்றும் (18) நாளையும் (19) நடைபெறவுள்ளன.

கடந்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இப்  போட்டிகள்   நாட்டில் இடம்பெற்ற அசாதரண சூழ்நிலையால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

ஏ பிரிவு பெண்களுக்கான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் நுகேகொடை புனித சூசையப்பர் மகளிர் தேசிய கல்லூரிக்கும் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் பாடசாலைக்கும் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது

அப் போட்டி முடிவடைந்த பின்னர் ஏ பிரிவு ஆண்களுக்கான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியும் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியும் விளையாடவுள்ளன.

நாளை வியாழக்கிழமை (19) சி, பி, ஏ ஆகிய 3 பிரிவுகளிலும் இருபாலாருக்குமான இறுதிப் போட்டிகள் காலை 7 மணியிலிருந்து நடைபெறும்.

வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ள சி பிரிவு பெண்களுக்கான இறுதிப் போட்டியில் யசோதராதேவி மகளிர் பாடசாலையும் குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் கல்லூரியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

தொடரும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் அம்பலாங்கொடை தர்மாஷோக்க கல்லூரியும் விளையாடவுள்ளன.

பி பிரிவு பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கொழும்பு மகளிர் கல்லூரியும் கண்டி ஹில்வூட் கல்லூரியும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் வத்தளை ஓ கே சர்வதேச பாடசாலையும் இஸிபத்தன கல்லூரியும் பங்குபற்றவுள்ளன.

ஏ பிரிவில் இருபாலாருக்குமான இறுதிப் போட்டிகள் நாளை பிற்பகல் 1.50 மணியிலிருந்து நடைபெறும்.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் கல்லூரியை கண்டி மஹமாயா கல்லூரி சந்திக்கவுள்ளது.  

தொடரும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியை கொழும்பு றோயல் கல்லூரி எதிர்த்தாடும்.

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு இந்த வருடம் கஜா ஹோல்டிங்ஸ் நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41