(லியோ நிரோஷ தர்ஷன்)

அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பின் சூழ்ச்சி இலங்கையில் இடம்பெறுகின்றமைக்கான சந்தேகங்கள் காணப்டுகின்றது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், வடக்கு கிழக்கை இணைக்க கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு புலி எனவும் கடுமையாக சாடினார். 

பொரெல்லையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில்  இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்   மேற்கண்டவாறு கூறினார்.