எரிவாயு இல்லாத காரணத்தால் அட்டன் நகரில் மூடப்பட்டுள்ள உணவகங்கள்

Published By: Digital Desk 3

18 May, 2022 | 04:35 PM
image

(அட்டன் கிளை)

சமையால் எரிவாயு இல்லாத காரணத்தால் அட்டன் நகரின் பிரதான உணவங்கள் கடந்த 10 நாட்ளுக்கும் மேலாக  மூடப்பட்ட நிலையிலுள்ளன. 

இதன் காரணமாக  அட்டன் நகருக்கு அன்றாடம் வருகை தரும் மக்கள் உணவை பெற்றுக் கொள்ள முடியாது அலைந்து திரிவதை காணக்கூடியதாக உள்ளது. ஓரிரு சிறு உணவகங்களும் சிற்றுண்டிகளை மாத்திரமே விற்பனை செய்கின்றன. 

அரிசிச் சோறு உணவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஒரு சிலர் பேக்கரி உணவுகளை பகல் உணவாக உண்ணும் நிலை தோன்றியுள்ளது. 

ஒரு சில உணவகங்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்ததால் பொசன் போயா தினம் வரை அட்டனுக்கு வருகை தந்திருந்த சிவனொளிபாதமலை யாத்ரிகர்களும் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். 

ஒரு சில உணவகங்களில் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்புகளின் மூலம் சிறிய அளவிலான உணவுகள் தயாரிக்கப்பட்டாலும் அவை சாத்தியப்படவில்லையென உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் அதில் பணி புரியும் பலர் தமது வேலை வாய்ப்பையும் இழந்துள்ளமை முக்கிய விடயம். 

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக  அட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு சமையால் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16