கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு.!

Published By: Robert

26 Oct, 2016 | 03:22 PM
image

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில் இன்று காலை 9.30 மணியளவில் சந்திப்பொன்று இடம்பெற்றது. 

முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர்,  கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி மற்றும் விவசாயத்துறை அமைச்சர்  கே.துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இதன்போது யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, மீள்குடியேற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் யாப்பில் அதிகார பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள், விதவைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் இங்கு கனேடிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிழக்கின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு கனடா உதவிகளை வழங்கி வரும் நிலையில் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டுள்ளன.

பல்லின கலாசாரத்தைக் கொண்ட நாடான கனடாவில் அரசியல் யாப்பு ரீதியாக அனைவருக்கும் சமமான அங்கீகாரமும் அதிகாரப் பங்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இலங்கையில் தற்போது அரசியல் யாப்புத் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதிகாரப் பங்கீடு தொடர்பில் கனடாவின் அனுபவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள 3  மாவட்டங்களிலும் ஆங்கில மொழிக் கற்கை நிலையங்கள் மற்றும்  தகவல் தொழில்நுட்ப நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளன.

-அப்துல் கையூம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29