உலகில் கோதுமையின் கேள்வி அதிகரிப்பு : மலையகத்தில் கோதுமை

Published By: Digital Desk 5

18 May, 2022 | 03:55 PM
image

குமார் சுகுணா 

இலங்கை மிக பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கின்ற இந்நிலையில் மக்கள் தங்களது அடிப்படை தேவைக்காக  போராட்டங்களில் ஈடுபட்டு வரகின்றனர். 

அன்றாட உணவு தேவைக்கே மக்கள் அல்லலுற்று வந்தாலும் ஏதோ ஒரு வேலை உணவை ஏனும் சாப்பிட்டே வருகின்றனர். 

ஆனால் தற்போது உலக சந்தையில்  ஏற்பட்டுள்ள கோதுமை மாவிற்கான கேள்வி.. விலை அதிகரிப்பு என்பன நம்மையும் பாதிக்கும் .

உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கை ரஷ்யாவும் உக்ரைனும் வகிக்கின்றன. 

தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் கோதுமை உற்பத்தியில் பெரிய அளவிலான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது உலகில் பல நாடுகளையும் பாதிக்க கூடும் நம்மையும் பாதிக்க செய்யும்.

மேலும் தற்போது இந்திய அரசு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்ட பட்டியலில் கோதுமையைச் சேர்த்துள்ளது.

 இது மேலும் உலக நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய போது உணவு, தானிய விநியோகம் பாதிக்கும் சூழல் உருவானது. 

அப்போது பற்றாக்குறையை சமாளிக்கத் தேவையான கோதுமையை விநியோகம் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக  தெரிவித்தது. 

அத்துடன் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.தற்போது இந்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதை 7 தொழில்துறை நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. 

இந்த நடவடிக்கையால் உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.

இது இலங்கையைும் பாதிக்கும். அதிலும் குறிப்பாக மலையக மக்களை அதிகமாக தாக்கம் அடைய செய்யலாம். 

ஏனெனில் மலையக மக்களின் பிரதான உணவு பொருளாக கோதுமை நிலவுகின்றது.

மலையக மக்களின் பிரதான  உணவு ரொட்டி. இது கோதுமை மாவினாலேயே தயார் செய்யப்படுகின்றது. 

அண்மையில் இலங்கையில் கோதுமை மா விலை அதிகரிப்பின் போது கூட மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இதனாலேயே.

 பல மலையக அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் மேடைகளிலும் அரசியல் மேடைகளிலும் ரொட்டி கோதுமை என்பனவற்றை பற்றி அதிகம் பேசுவதும் இதனாலேயே.

 மலையக மக்களோடு இவ்வாறு ஒன்றித்து போயுள்ள கோதுமை அவர்களது உடல் நலத்துக்கு எந்தளவு ஆரோக்கியமானது என்றால் அது கேள்விக்குறியே.  

அந்தந்த நாடுகளின் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.. 

ஆனால் தமிழர்களான நாம் ஆரம்பகாலத்தில் கோதுமை உணவுகளை உட்கொண்டதில்லை. அரிசி,, திணை மாவுகளே நமது பிரதான உணவு. 

குறிப்பாக மலையக தமிழர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள்  இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட பின்னர்தான் கோதுமை உணவு இவர்களுக்கு பிரித்தானியர்களினால் வழங்கப்பட்டது. அக்காலத்தில்  இது தொடர்பில்  வாய்வழி கதை ஒன்றும் உள்ளது.

அதாவது தென்னிந்தியர்கள் தேயிலை தோட்ட வேலைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் அவர்களிடம் வேலை வாங்குவதற்கு வெள்ளைகாரர்கள் அவர்களை போன்று நல்ல உடைகளை கொடுத்ததாகவும் ஆனால் அவர்கள் அதனை கழற்றி வீசிவிட்டு   தங்களது உடையை அணிந்திருக்கின்றனர். 

அதன் பின்னர் மதுவை கொடுத்து வேலை வாங்க நினைத்த ஏகாதிபத்தியம் மது கொடுத்திருக்கிறது. 

மதுவை அருந்தியவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டை சச்சரவு என ஈடுபட பின்னர் என்ன செய்யலாம் என்று யோசித்த நிர்வாகம் உணவுகளை கொடுத்துள்ளது. 

அதாவது இந்தியாவில் அவர்கள் உண்ட அரிசி கம்பு கேப்ப கடலை பாசிப்பயறு  போன்ற தானியங்களை கொண்டு வந்து கொடுத்திருக்கின்றனர். 

அத்துடனேயே கோதுமையையும் கொடுத்திருக்கின்றனர்.  போதுமான உணவு கிடைத்ததும் வேலையும் நன்றாக நடந்திருக்கின்றது. 

விளைச்சலும் கிடைத்திருக்கின்றது. பல காலம் இந்த தானிய வகைகள் அவர்களுக்கு கிடைத்தாலும் கால போக்கில் கோதுமை மட்டுமே பிரதானமாக கிடைக்கின்றது.

உண்மையில் அதி காலையில் எழுந்து சமைத்து சாப்பாடு செய்துக்கொண்டு மலைக்கு போகிறவர்களுக்கு பிட்டு,இட்லி, இடியப்பம் செய்வதை விட ரொட்டி சுடுவது இளகுவானது என்பதனால் அவர்கள் ரொட்டியை காலை உணவாக செய்திருக்கின்றனர். 

அது மட்டும் அல்ல ரொட்டி பல மணித்தியாலங்கள் பசியை கட்டுப்படுத்தும் என்பதனால் அதுவே பிரதான உணவாகிவிட்டது. 

இந்த கோதுமையில் பல நன்மைகள் இருந்தாலும் அதில் தீமைகளும் இருப்பதாகவே கூறப்படுகின்றது.

வில்லியம் டேவிஸ் என்ற அமெரிக்க இதய நோய் நிபுணர் ஆரோக்கிய விழிப்புணர்வு தரும் எண்ணற்ற புத்தகங்களை எழுதியவர்.

இவர் எழுதிய ' என்ற புத்தகம் பரபரப்பாக பேசப்பட்டுஇ விற்பனை யில் புதிய உச்சத்தை சமீபத்தில் எட்டிப் பிடித்திருக்கிறது. 

'இதய நோய்களுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை களை செய்து வருபவன் நான். என்னிடம் சிகிச்சைக் காக வரும் நோயாளிகள் படும் துயரங்களை பார்த்து மிகுந்த வேதனைப் பட்டிருக்கிறேன்.

ஆஞ்சியோ ப்ளாஸ்டி என்பது இதய நோய்க்காக செய்யும் ஒட்டு வேலை தான் என்பதை கொஞ்ச நாளிலேயே உணர்ந்து கொண்டேன். 

அதனால்இ இதற்கான மூலகாரண த்தைக் கண்டறிய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முக்கியமாக என்னுடைய அம்மாவே மாரடைப்பால் இறந்தது எனக்கு மிகப் பெரிய துக்கத்தைக் கொடுத்தது. 

அதனால்இ கடந்த 15 வருடங்களாக இதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சி யிலேயே முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

இத்தனை வருட ஆய்வின் பலனாக உருவானது தான் நான் எழுதிய 'றூநயவ டிநடடல' எனும் புத்தகம்' என்று தன் புத்தகம் பற்றிக் கூறுகிறார் டேவிஸ்.

'நோய்களை உருவாக்குவதில் கோதுமையின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்து அதிர்ந்து போனேன்'

நம்மில் பெரும் பான்மையோர் இன்று சந்திக்கும் முக்கிய நோய்களான நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு மூலகாரணமாக இருப்பது நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கோதுமையே.

நம் உணவி லிருந்து கோதுமையை நீக்கி விட்டால் நம் வாழ்க்கையே மாறி விடும். என்கின்றார்.

ஆய்வு இப்படி கூறினாலும் .முழு கோதுமையில் பல சத்துக்கள் உள்ளன.  தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். 

கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈஇ செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும்

கோதுமையானது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சிறந்தது என எண்ணற்ற நள்மைகளும் கூறப்படுகிறது. 

எனவே உலகில் பெரும்பாலான மக்கள் அரிசிக்கு பிறகு கோதுமையையே பிரதானமாக உட்கொள்கின்றனர்.

மலையக மக்களும் கோதுமையோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதனால் கோதுமை பற்றி அரசியல் மேடைகளில் அதிகம் பேசப்படுகின்றது. கோதுமை அரசியலும் செய்யப்படுகிறது.

ஆனால்  இன்று நாம் இலங்கையில் மலையக பகுதிகளில் உண்ணுகின்ற வெள்ளை மா கோதுமை மாவா என்பது கேள்விக்குறியே. 

நமது முன்னோர்களை கேட்டால் அக்காலத்தில் போல தற்போது கோதுமை மா வாசனை எதுவும் இல்லை என்றே கூறுவார்கள். 

உண்மையில் நாம் உண்பது கோதுமையா. என்றால் அது சந்தேகத்துகத்துக்கு இடமானது என்றே கூற வேண்டும்.

ஏன் எனில் கோதுமை என்பது  இங்கு நாம் பல .நேரங்களில் உண்ணுகின்ற வெள்ளை மாவு அல்ல. இந்த வெள்ளை மா உண்மையில் மைதா மா. கோதுமை என்பது லேசான பிறவுன் நிறத்தில் இருக்கும்.

மைதாவும் கோதுமையில் இருந்ததே  தயாரிக்கப்படுகின்றது. இதனால்  நல்லது என்றே பலரும் கருதுகின்றனர்.

 ஆனால்இ கோதுமையின் வெளிப்புற பகுதி நீக்கப்பட்டு உள்ளே உள்ள வெண்ணிற பகுதியை மட்டும் பல்வேறு இரசாயனங்கள் சேர்த்துச் சுத்தப்படுத்த படுவதால் மைதா உடலுக்கு கெடுதலானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மைதா மாவு மிருதுவாகவும் பளீச் என வெள்ளையாகவும் இருக்க .இரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பிளீச் செய்யப்படுகிறது என்பதால் முடிந்த வரை மைதாவை தவிர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

இருப்பினும்  நமக்கு அதை தவிர்க்க முடியவில்லை.கோதுமையில் ஆரோக்கியமும் இருக்கின்றது.

ஆனால் மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவது பல உடலியல் கேடுகளை உருவாக்கும்.  

சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும். மைதாவால் உடலில் அதிகரித்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர கணையம் அதிக அளவில் இன்சுலினை சுரக்க வேண்டியதாக உள்ளது. நாளடைவில் இது டைப் 2 சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.

மைதாவில்  ஊட்டச்சத்து இல்லாத அதிகப்படியான கலோரி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மைதா ,சர்க்கரை அளவு கொழுப்பு அளவை அதிகரிப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மைதா உணவுகள் .

இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து இதயத்துக்கான இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி விடும். 

எனவே எப்போதாவது ஒரு முறை மைதா உணவு எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் நலம் பாதிக்கப்படும். 

என கூறப்படுகின்றது இந்நிலையில் நாம் தொடர்ந்து கோதுமை என்ற பெயரில் மைதாவையே அதிகம் உண்கின்றோமா என்ற  சந்தேகம் அதிகமாகவே எழுகின்றது. 

ஏன் எனில் இன்று விற்பனை .செய்யப்படும் மாவின் தரம் சந்தேகத்.தை ஏற்படுத்துகின்றது. 

இந்நிலையில் உலக அளவில் கோதுமை மாவிற்கு விலை அதிகரித்துள்ளது 2019 ஆம் ஆண்டில்இ ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி 8.14 பில்லியன் டொலராக இருந்ததுஇ உக்ரைன் சுமார் 3.11 பில்லியன் டொலர் கோதுமையை ஏற்றுமதி செய்தது.

 தற்போது இரு நாடுகளுக்கு மத்தியிலான போரின் காரணமாகக் கோதுமை உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு உருவாகி விலை அதிகரித்துள்ளது. 

ஏற்கனவே உணவு பொருட்களுக்கு அதிகளவிலான தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்தியாவின் தடை சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் எதிரொலியாகவே ஐரோப்பிய சந்தை தொடங்கியதும் ஒரு தொன் கோதுமை விலை 435 யூரோ-வாக (கூ453) விலை உயர்ந்ததுள்ளது. இது எம்மையும் பாதிக்க செய்யும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21