சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

18 May, 2022 | 07:12 AM
image

இன்றிலிருந்து நாளாந்தம்  80 ஆயிரம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை  விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

3,700 மெட்றிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்று நேற்றையதினம் இலங்கை வந்துள்ளதுடன், 3,600 மெட்றிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்று நாளை  (19) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அதற்கான பணத்தை செலுத்துவதற்கு முடியுமாகவுள்ளதாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டார். 

அத்துடன், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள  100 மில்லியன் டொலர் தொகையையும் பயன்படுத்தி அடுத்த வாரத்திற்குள் மேலும் சில சமையல் எரிவாயு தாங்கிய கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும்  லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த வாரமளவில் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக லாப் கேஸ் நிறுவனத் தலைவர் டபிள்யூ.எச்.கே. வேகபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04