தமிம் 133 ஓட்டங்களுடன் ஓய்வு : ரஹிம், தாஸின் அரைச் சதங்களுடன் வலுவான நிலையை நோக்கி பங்களாதேஷ்

Published By: Digital Desk 4

17 May, 2022 | 09:53 PM
image

(என்.வீ.ஏ.)

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதலாவது போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்டவண்ணம் உள்ளது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 397 ஓட்டங்களுக்கு பதிலளித்து தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் போட்டியின் மூன்றாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (17) ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Tamim Iqbal gets tended to by the team physio, Bangladesh vs Sri Lanka, 1st Test, Chattogram, 3rd day, May 17, 2022

இன்றைய ஆட்டத்தின்போது விஷ்வா பெர்னாண்டோவுக்கு முளை அதிர்ச்சி ஏற்பட்டதால் அவர் அணியிலிருந்து வாபஸ் பெறப்பட்டு அவருக்குப் பதிலாக கசுன் ராஜித்த அணியில் சேர்க்கப்பட்டார்.

போட்டியின் இரண்டாம் நாளான திங்களன்று தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷொரிபுல் இஸ்லாம் வீசிய பந்து விஷ்வா பெர்னாண்டோவின் ஹெல்மெட்டை தாக்கியதன் காரணமாக அவர் மூளை அதிர்ச்சிக்குள்ளானார்.

Litton Das and Mushfiqur Rahim added 98 runs for the fourth wicket by close of play, Bangladesh vs Sri Lanka, 1st Test, Chattogram, 3rd day, May 17, 2022

இன்றைய தினம் முதலாவது ஆட்ட நேர பகுதியில் விஷ்வா பெர்னாண்டோ மேலும் அதிர்க்குள்ளானதால் மாற்று வீரராக கசுன் ராஜித்த அணியில் இணைக்கப்பட்டார்.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது 1ஆவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களுடன் தொடர்ந்த பங்களாதேஷ் சார்பாக மஹ்முதல் ஹசன் ஜோயும் தமிம் இக்பாலும் திறமையாக துடுப்பெடுத்தாடி இலகுவாக ஓட்டங்களைப் பெற்றவண்ணம் இருந்தனர்.

Mushfiqur Rahim was happy to take his time in the middle, playing an odd sweep against spin, Bangladesh vs Sri Lanka, 1st Test, Chattogram, 3rd day, May 17, 2022

அவர்கள் இருவரும் 1ஆவது விக்கெட்டில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஹசன் ஜோய் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

முளை அதிர்ச்சிக்குள்ளான விஷ்வாவுக்கு பதிலாக மாற்று வீரராக மதிய போசன இடைவேளையின் பின்னர் களம் புகுந்த கசுன் ராஜித்த 7 ஓவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட பின்னர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். அவர் தனது முதல் ஓவரிலேயே, ஒரு ஓட்டம் பெற்றிருந்த நஜ்முல் ஹொசெயன் ஷன்டோவின் விக்கெட்டை கைப்பற்றினார். (172 - 2 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்கள் சேர்ந்தபோது அணித் தலைவர் மொமினுள் ஹக் (2), ராஜித்தவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Concussion sub Kasun Rajitha picked up two quick wickets, Bangladesh vs Sri Lanka, 1st Test, Chattogram, 3rd day, May 17, 2022

இந் நிலையில் தமிம் இக்பாலும் முஷ்பிக்குர் ரஹிமும் ஜோடி சேர்ந்து அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் துடுப்பெடுத்தாடினர்.

அவர்கள் இருவரும்  4ஆவது விக்கெட்டில்  34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது (மொத்த எண்ணிக்கை 220 ஓட்டங்கள்) தமிம் இக்பால் உபாதைக்குள்ளாகி 133 ஓட்டங்களுடன் தற்காலிக ஓய்வு பெற்றார்.

Asitha Fernando broke the 150-run opening stand, Bangladesh vs Sri Lanka, 1st Test, Chattogram, 3rd day, May 17, 2022

அவர் ஓய்வு பெற்ற பின்னர் முஷ்பிக்குர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ்  98 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் முஷ்பிக்குர் ரஹிம் 53 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

Tamim Iqbal made a rapid start, Bangladesh vs Sri Lanka, 1st Test, Chattogram, 3rd day, May 17, 2022

இலங்கை பந்துவீச்சில் கசுன் ராஜித்த 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 55 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Tamim Iqbal celebrates his century, Bangladesh vs Sri Lanka, 1st Test, Chattogram, 3rd day, May 17, 2022

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49