ஃபெயார்ப்ரேக் அழைப்பு மகளிர் இருபதுக்கு - 20 : சமரி அத்தபத்து சாதனை

Published By: Digital Desk 4

17 May, 2022 | 09:51 PM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற அங்குரார்ப்பண  ஃபெயார்ப்ரேக்  அழைப்பு மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த வீராங்கனை என்ற சாதனையை இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து நிலைநாட்டினார்.

Articles Tagged Under: சமரி அத்தபத்து | Virakesari.lk

6 அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் பெல்கன்ஸ் அணியில்  இடம்பெற்ற  சமரி அத்தபத்து,  7 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி  மொத்தமாக 313 ஓட்டங்களைக் குவித்தார்.

ஃபெயார்ப்ரேக் சுற்றுப் போட்டியில் சதம் குவித்த முதலாவது வீராங்கனை என்ற சாதனையை நிலைநாட்டியதுடன் ஆட்டநாயகி விருதை வென்ற முதலாவது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

ஒரு சதம், ஒரு அரைச் சதத்துடன் 32.16 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருந்த அத்தபத்துவின் ஸ்ட்ரைக் ரேட் 139.11 ஆகும்.

இரண்டு போட்டிகளில் போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொண்ட ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டங்களிலும் சமரி அத்தபத்து பங்காற்றியிருந்தார். அத்துடன் பந்துவீச்சிலும் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்தின் இடதுகை சுழல்பந்துவிச்சாளர் சொபி எக்லஸ்டோன் 7 போட்டிகளில் 17 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தி பந்துவீச்சில் முதலிடம் வகித்தார். ஸ்பிரிட் அணிக்காக எக்லஸ்டோன் விளையாடியிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக இறுதி ஆட்டத்தில் சமரி அத்தபத்துவினால் பிரகாசிக்க  முடியாமல் போனதுடன் அவரது அணி தோல்வி அடைந்து 2ஆம் இடத்தையே பெற்றது.

அப் போட்டியில் பெல்கன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டோர்னாடஸ் 19.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியனானது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07