மே 9 வன்முறைகள் : அமைச்சர் தினேஷ் உள்ளிட்டவர்களின் வீடுகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Published By: Digital Desk 4

17 May, 2022 | 10:05 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து,  பரவிய வன்முறைகளில் அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட  பாராலுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது ஜன பெரமுன பிரமுகர்களின் வீடுகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக   கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிசார் செவ்வாய்க்கிழமை  (17) அறிவித்தனர்.  

கோட்டா கோ கம”, “மைனா கோ கம” தாக்குதல்கள் :பொலிஸ் நிலையங்களில் 14  முறைப்பாடுகள் பதிவு | Virakesari.lk

கிருலப்பனை,  வெலிக்கடை ,முல்லேரியா மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸார் இது குறித்து அறிக்கைகள் ஊடாக அறிவித்தனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வீடு மற்றும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன ஆதரவாளராக பரவலாக அறியப்படும்  பாடகர் இராஜ் வீரரத்ன ஆகியோரின்  வீடுகள் தாக்கப்பட்டமை தொடர்பில் கிருளப்பனை பொலிசார் விசாரித்து வருவதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.  

இந்த சம்பவங்களுக்காக ஒருவரை கைது செய்து பொலிசார்  நீதிமன்றில் ஆஜர் செய்துள்ள நிலையில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில்  வெலிக்கடை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

 அத்துடன்,  கொட்டிகாவத்த, முல்லேரியா பிரதேச சபையின் தலைவர்  இந்துனில் ஜகத் குமாரவின்  வீட்டின் மீது தாக்குதல் நடாத்தி நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  முல்லேரியா பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

 இதேவேளை  மாகாண சபை உறுப்பினர்  ரேனுக பெரேராவின்  வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04