புலிகளின் தாக்குதல் தொடர்பில் வெளியான செய்தி பொய்யானது - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Published By: Digital Desk 3

17 May, 2022 | 10:06 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியாது.

தனது இருப்பிற்கு மக்களின் போராட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

விடுதலை புலிகளின் தாக்குதல் தொடர்பில் தற்போது குறிப்பிடப்படும் செய்தி பொய்யானது.

தீவிரவாதிகள் தலைமறைவாகியிருந்த தீவில் அரச தலைவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற  கூட்டத்தொடரின் போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவசரகால சட்டம் கடந்த 6ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட போது சமூகத்தின் மத்தியில் அத்தியாவசிய சேவை விநியோகத்தில் மாத்திரம் சிக்கல் நிலைமை காணப்பட்டது.

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை முன்கூட்டியதாக அறிந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடக்கவே அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியது.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குல் மற்றும் அதனுடனான வன்முறை சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.நெருக்கடியில் சிக்குண்ட மக்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்படுவதம் கவலைக்குரியது.வன்முறை சம்பவம் எங்கிருந்து ஆரம்பமானது என்பமை ஆளும் தரப்பினர் குறிப்பிட மறந்து விடுகிறார்கள்.

வன்முறை சம்பவத்திற்கான தூண்டுதல் அலரிமாளிகையில் கட்டவிழ்த்து விடப்பட்டது,அரசதலைவர்கள் அதற்கு ஆதரவு வழங்கினார்கள்.தூண்டுதலின் விளைவை தற்போது ஆளும் தரப்பினர்கள் எதிர்க்கொள்கிறார்கள். ஆகவே பிற கட்சிகளின் மீது பழியை சுமததி உண்மையை மறைக்க முடியாது.

போராட்டகளத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும்,சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் ஒன்றிணைந்து சென்று ஆர்ப்பாட்டகாரர்கள் மீது குண்டர்கள் தாக்குதலை மேற்கொள்ள இடமளித்துள்ளார்கள். இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களின் வெறுப்பு போராட்டமாக வெளிப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேசப்படுகிறது.கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தற்போது பிரதமராகவும் அதிகாரம் கொண்டவராகவும் உள்ளார்.

விடுதலை புலிகளின் தாக்குதல் தொடர்பில் குறிப்பிடப்படுகின்றமை முற்றிலும் பொய்யானது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் முறையற்ற விடயங்களை குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்திக்கொள்ள வேண்டாம்

மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் தலைமறையாகியிருந்த தீவுகளில் தற்போது அரச தலைவர்கள் தலைமறைவாகியுள்ளார்கள்.மக்களின் விருப்பத்திற்கு அமைய செயற்பட்டிருந்தால் இந்நிமையை ஏற்பட்டிருக்காது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01