ஆர்யாவின் 'கேப்டன்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 4

17 May, 2022 | 02:26 PM
image

நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'கேப்டன்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கேப்டன்'. இதில் நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் சிம்ரன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் கேப்டன் திரைப்படம்  செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியன்று தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'சர்பட்டா பரம்பரை', 'அரண்மனை 3' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த 'கேப்டன்' வசூலில் வெற்றி பெற்று, நடிகர் ஆர்யாவிற்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37