இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம்

Published By: Digital Desk 5

17 May, 2022 | 01:17 PM
image

(ஏ.என்.ஐ)

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கலந்துரையாடல் இந்தியாவில் திங்கட்கிழமை(16) ஆரம்பமாகியது. 

பாகிஸ்தானில் இருந்து 3 பேர் கொண்ட பிரதிநிதிகள் அடங்கிய  குழு கலந்துகொண்டுள்ளதுடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரநிதிகளும்  கலந்துகொண்டுள்ளனர்.

பாகிஸ்தானின் தூதுக்குழுவாக எல்லை வழியாக டெல்லியை வந்தடைந்தது. பாகிஸ்தான் தூதுக்குழு மே 20 வரை இந்தியாவில் தங்கியிருக்கும் என்று ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் துணை வெளியுறவு அமைச்சர்கள் கடந்த மாதம் மொஸ்கோவில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.  

இதன்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து  அந்த நாடு ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த முக்கிய சந்திப்புகள் நடைபெறுகின்றன.

தலிபான்கள் அதிகாரத்திற்கு  வந்த பின்னர் பொருளாதார சீர்குலைவு மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவை நாட்டை மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளியது. 

முன்னதாக நவம்பர் மாதம், ஆப்கானிஸ்தான் தொடர்பான மூன்றாவது பிராந்திய பாதுகாப்பு  கலந்துரையாடல் விரிவாக்கப்பட்ட வடிவத்தில் டெல்லியில் நடைபெற்றது.

இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் , செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலைமை மற்றும் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதாபிமான உதவியின் தேவை ஆகியவற்றிலிருந்து எழும் அச்சுறுத்தல்கள் குறித்தும் கவனத்தில் செலுத்தப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17