தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் இந்தியாவிற்குரிய பொறுப்பு உரியவாறு நிறைவேற்றப்படவேண்டும் - இரா.சம்பந்தன் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

17 May, 2022 | 11:33 AM
image

(நா.தனுஜா)

ஸ்தம்பிதமான நிலையிலிருக்கும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா அவதானம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும், இவ்விடயத்தில் இந்தியாவிற்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்றவேண்டியது அவசியம் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வலியுறுத்தியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. 

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

இந்திய உயர்ஸ்தானிகருடன் சுமார் ஒருமணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தற்போது ஸ்தம்பிதமான நிலையிலிருப்பதாக அவரிடம் சுட்டிக்காட்டியதாகவும், இவ்விடயத்தில் இந்தியாவிற்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்றவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கேசரியிடம் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி தற்போது நாட்டில் குழப்பகரமான சூழ்நிலையொன்று நிலவுகின்ற பின்னணியில், தமிழ்மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் இதுகுறித்து இந்தியா அவதானம் செலுத்தவேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர், இப்போது நாட்டில் இடம்பெற்றுவரும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இச்சந்திப்பின்போது புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஏதேனும் பிரஸ்தாபித்தாரா என்று கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, 'இல்லை' என்று பதிலளித்த அவர், இவ்விடயத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தாம் உயர்ஸ்தானிகரிடம் தெளிவுபடுத்தியதாகக் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04