பாராளுமன்றப் பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்கத் தயார் - ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு

Published By: Digital Desk 3

17 May, 2022 | 11:14 AM
image

(நா.தனுஜா)

அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதில் காணப்படும் முட்டுக்கட்டைகளின் காரணமாக, தன்னால் முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய பாராளுமன்றப் பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

Harsha says no to Finance Ministry: Explains why - NewsWire
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று  ஏற்கனவே அறிவித்திருந்த ஹர்ஷ டி சில்வா, பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்குவது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதில் காணப்படுகின்ற முட்டுக்கட்டை காரணமாக பாராளுமன்ற பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்க முன்வருகின்றேன். 

பாராளுமன்ற முன்மொழிவாக அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பொருளாதார மறுமலர்ச்சித்திட்டத்தைத் தயாரிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றேன்.

பொதுநிதிக்குழு தொடர்பில் அறியாதவர்களுக்கு அதுகுறித்து விளக்கமளிக்க விரும்புகின்றேன். அரசியலமைப்பிற்கான 148 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பொதுநிதியை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்ட மிகவும் வலுவானதொரு குழுவாகப் பாராளுமன்ற பொதுநிதிக்குழு காணப்படுகின்றது. 

எனவே அரசாங்கத்தில் அங்கம்வகிப்பதை விடவும், பொதுநிதிக்குழுவில் என்னால் முக்கிய பங்களிப்பைச்செய்யமுடியும் என்று கருதுகின்றேன் என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55