ஜோன்ஸ்டன், சனத் நிசாந்த உள்ளிட்ட 22 பேரை கைதுசெய்ய ஆலோசனை : பின்னர் மஹிந்த தொடர்பில் தீர்மானம்

17 May, 2022 | 06:17 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக  முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிசாந்த, மேல் மாகாண  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோரை உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவுக்கு, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன  அனுப்பியுள்ளதாக கூறப்படும்  ஆலோசனைகளில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சந்தேக நபர்களை  நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

 அரசியல்வாதிகள், சில செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் என இந்த பட்டியல் நீள்கிறது.  

வீரகேசரிக்கு கிடைத்த தகவல்களின் படி, சட்ட மா அதிபர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய ஆலோசனை வழங்கியுள்ளவர்களின் பட்டியலில்   நாலக விஜேசிங்க,  மிலான் ஜயதிலக, பந்துல ஜயமான்ன , தினெத் கீதகே, சமன் லால் பெர்ணான்டோ,  தேசபந்து தென்னகோன்,  அமல் சில்வா,  சஜித் சவங்க, டேன் ப்ரியசாத்,  புஷ்பலால் குமாரசிங்க, சஞ்ஜீவ எதிரிமான்ன,  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிசாந்த,  நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம,  புஷ்ப லால் குமார, மஹிந்த கஹந்தகம,  திலிப் பெர்ணான்டோ,  உள்ளிட்டோர் உள்ளடங்குகின்றனர்.

 கோட்டா கோ கம, மைனா கோ கம மீதான தாக்குதல்கள் குறித்த வீடியோ காட்சிகளை ஆராயும் போது, குறித்த  22 பேர் தொடர்பிலும் நியாயமான சந்தேகம் எழும் நிலையிலேயே அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஆலோசனை வழ்னக்கப்பட்டுள்ளதாக, சி.ஐ.டி.க்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது இவ்வாறிருக்க,  இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பில்  ஏதும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளனவா என வீரகேசரி அவதானம் செலுத்தியது.

 இது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  தகவல்கள் படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில், விசாரணைகளின் கோவைகள், சாட்சிகள் என்பன  முழுமையாக பரிசீலிக்கப்பட்ட பின்னர் தேவையான ஆலோசனை வழ்ங்கப்படவுள்ளதாக அறிய முடிந்தது.

 எவ்வாறாயினும் இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில்  முன்னேற்றம் தொடர்பில் இன்று  (17) சட்ட மா அதிபருக்கு  அறிவிக்க விசாரணை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59