தனியார் பேருந்து போக்குவரத்து சேவை இன்று முதல் வழமை போல் இடம்பெறும் - அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

Published By: Digital Desk 5

16 May, 2022 | 09:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தனியார் பேருந்து  சேவைக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க இலங்கை பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தனியார் பேருந்து போக்குவரத்து சேவை இன்று முதல் வழமை போல் இடம்பெறும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Private Bus operations to reduce to 25% next year – NewsRadio – English

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல் நிலைமையினால் தனியார் பேருந்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது,நேற்றைய தினம் ஒருசில வீதிகளில் ஓரிரு பேரூந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல் நெருக்கடிக்கு தற்போது கனிசமான அளவு தீர்வு எடுக்கப்பட்டுள்ள நிலையில் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய அரச மற்றும் தனியார் பொது போக்குவரத்து சேவைக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்கமாறு பிரதமர் அலுவலகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

தனியார் பேருந்து சேவைக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்க இலங்கை பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.இன்று முதல் தனியார்பேருந்து போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21