அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை - கபீர் ஹாசிம்

Published By: Digital Desk 5

16 May, 2022 | 09:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறி, சுயாதீன உறுப்பினராக அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

கட்சி மாறி வாக்களித்த மக்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஒருபோதும் துராேகம் இளைக்கமாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தி கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்து சமூக வலைத்தலங்களில் பரவலாகிவரும் செய்தி தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Kabir Hashim resigns as General Secretary of UNP

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, சுயாதீன உறுப்பினராக அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்திருப்பதான செய்தி, பல்வேறு ஊடகங்களில் பரவி வருகின்றதை அறியக்கிடைத்தது. இந்த செய்தியை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஜனாதிபதிக்கு 4 நிபந்தனைகள் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டிருந்தன. 

எனது கட்சியினால் முன்வைக்கப்பட்டிருந்த இந்த நிபந்தனைகள் மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும், மிகவும் நியாயமான நிபந்தனைகளாகும். கட்சியின் இந்த நிலைப்பாட்டுடன் நானும் இணங்குகின்றேன். 

கட்சியின் மற்றும் எனது கொள்கையை எந்தவகையிலும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை என்பதை மிகவும் தெளிவாக தெரிவிக்கின்றேன்.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் முகம்கொடுத்துள்ள சவால்களை புரிந்துகொண்டு, வற்றுக்கு நிலையான தீர்வு கொண்டுவருவதற்காக ஆதரவளிப்பதற்கு நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்போம். 

அதன் பிரகாரம் பொருளாதார மறுசீரமைப்புக்காக அரசாங்கம் முன்வைக்கும் எந்தவொரு நல்ல பிரேரணைக்கும் ஆதரவளிப்பதற்கு நாங்கள் தயாராக இருப்போம்.

அதேபோன்று கோட்டா கோகமவில் போராடும் இளைஞர் யுவதிகள் மற்றும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்காக தொடர்ந்து போராடுவோம் என்றார்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் செயற்பாடுகள் உள்ளடங்கிய 100 நாள் செயற்திட்டத்தை போன்று தற்போதைய நிலைமையினையும், இடைக்கால அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் அல்லது அதன் வரைபு தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதனை அடிப்படையாகக் கொண்டே இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா,இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38