வற் வரி திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, பாராளுமன்றச் சந்தியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறித்த சட்ட மூலம் அரசியல் யாப்புடன் ஒத்திசைவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.