முன்னள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளார்.

இதன் போது 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பில் சரியான தகவலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்க தவறியமை உட்பட இரண்டு வழக்குகள் தொடர்பில் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.