“ மைனா கோ கம” தாக்குதல் : மொரட்டுவை நகர சபை ஊழியர் கைது - 170 வாக்கு மூலங்கள்  இதுவரை பதிவு

15 May, 2022 | 03:24 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மக்களின்  அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில்,  கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்து மீறிதாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்த விசாரணைகளில் இதுவரை சி.ஐ.டி.யினர் சுமார் 170 வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள நிலையிலேயே தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்ட மைனா கோ கம மீது அத்துமீறி அங்கு அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைத் தாக்கியமை,  சொத்து சேதம் விளைவித்தமை மற்றும் சட்ட விரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்தமை தொடர்பில் குறித்த நபர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை நகர சபை ஊழியரான  49 வயதுடைய குறித்த சந்தேக நபரை, இன்று ( 15) அதிகாலை கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள் குறித்து சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை சட்ட மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 சி.ஐ.டி.யினர் பதிவு செய்துள்ள வாக்கு மூலங்கள் மற்றும் வீடியோ, புகைப்பட சான்றுகள், தொழில் நுட்ப சாட்சிகளுக்கு அமைய குறித்த சந்க்தேக நபர், அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதான தாக்குதலில் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை தெரியவந்த நிலையில், அவரைக் கைது செய்ததாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21