தி.மு.க.வின் முதலாமாண்டு : ஓர் மதிப்பீடு

Published By: Digital Desk 5

15 May, 2022 | 03:10 PM
image

குடந்தையான்

தமிழகத்தின் முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் திகதியன்று  மு.க.ஸ்டாலின்  பதவியேற்றிருந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தி.மு.க., தனது முதலாவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது.

இந்த ஓராண்டில் அந்தக்கட்சி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? அல்லது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, மக்களை தொடர்ந்து வேதனைக்குள்ளாக்கியிருக்கிறதா..? என்ற விவாதம் தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசியலில் வலிமையான எதிர்கட்சி என சொல்லிக்கொள்ளும் அ.தி.மு.க., தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் அத்தரப்பு அளித்த வாக்குறுதிகள் எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை, மக்கள் வேதனையுடன் தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி.தமிழக அரசின் ஓராண்டு நிறைவை பாராட்டி கடிதம் எழுதியிருப்பது, ‘வழக்கமான மரபு’ என்று கூறப்பட்டாலும்,  மு.க.ஸ்டாலினின் அரசியல் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கருதப்படுகின்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயற்பாடு தொடர்பில், பொதுமக்கள், “ஓய்வறியா உழைப்பாளி” என்று நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். 

விரைவில் நடைபெறவிருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் ஆதரவு வேண்டும் என்றால் அக்கட்சி நீட் விவகாரத்தில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அங்கீகாரம்  வழங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்விதமான கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் நீட் விவகாரத்தில் தி.மு.க. மக்களிடத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று மாணவர்களும், மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

அந்த வகையில் சாதுரியமாகவும், அரசியல் ரீதியிலும் காய் நகர்த்தி வரும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை அனைவரும் பாராட்டவே செய்கிறார்கள்.

தமிழகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக அறிவித்துக் கொள்ளும் பா.ஜ.க.வின்  அரசியலுக்கு இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் எதிர்வினையாற்ற வேண்டும் என்று தி.மு.க.தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை வசப்படுத்த ஆதாரம் இருந்தும் பா.ஜ.க.வின் அரசியல் நெருக்கடியால் தனியார் அமைப்புக்கு விட்டுக்கொடுத்த விவகாரம், தருமபுர ஆதினத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி அளித்த விவகாரம் உள்ளிட்ட  விடயங்களில் முதல்வரான மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுடன் மறைமுக சமரச அரசியலுக்கு உடன்பட்டதாகவே தெரிகிறது என்ற விமர்சனமும் உள்ளது.

மேலும் ஸ்டாலின் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நோக்கத்தில் ‘திராவிட முறை’ பாணியிலான அரசை நடத்திவருவதாக உரத்து குரல் கொடுத்து வரும் வேளையில், அவருடைய அமைச்சரவையில் உள்ள சேகர்பாபு, ‘தி.மு.க. அரசு ஒரு ஆன்மீக அரசு’ என்று பிரதிபலித்து வருகிறார்.

இதனால் மக்களிடத்தில் தற்போதைய தி.மு.க. அரசு, ‘திராவிட முறை’ பாணியிலான அரசா அல்லது ஆன்மீக அரசா? என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அ.தி.மு.க.வில் ‘ஒற்றை அதிகார மையம’; மட்டுமே இருந்தது. அதேதருணத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என்று பல அதிகார மையங்கள் இருந்தன.

தற்பொழுது முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னரும் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி என்று அதிகார மையங்கள் விரிவடைந்திருக்கிறன்றன.

இவ்வாறு அதிகார மையங்களை தொடர்ச்சியாக விரிவடையச் செய்து வருகின்றமையானது, அக்கட்சி மீது குடும்ப ஆதிக்கம் கொண்ட கட்சி என்ற அடையாளத்தினை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளதோடு ஸ்டாலினின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அயோத்தியா மண்டபம், தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் போன்ற பல விவகாரங்களில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அரசுக்கு ஆலோசனை வழங்கியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதன் மூலம் முதல்வரின் குடும்ப ஆதிக்கம் தமிழக அரசியலில் தொடருகிறது என்பது உறுதியாகிறது.

ஆட்சி மாற்றம் தான் நடைபெற்ற இருக்கிறதே தவிர ஊழல்கள் எந்த வகையிலும் குறையவில்லை என்று தன்னார்வலர்கள் கள ஆய்வு செய்து தெரிவிக்கிறார்கள்.

அத்துடன் தி.மு.க.அரசு, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதார உதவிகளை செய்வதற்கான அறிவிப்பும், இதில் இந்திய அரசினையும் உடன்பட வைத்த உத்தி ஆகியவையும் பாராட்டுக்குரியது.

தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலையின் இலங்கை பயணம் கூட தி.மு.க. அரசின் மறைமுகமான அரசியல் நிர்பந்தத்தால் தான் நிகழ்ந்தது என்றும் கருதப்படுகின்றது.

தி.மு.க.பொருளாதார நெருக்கடி இருக்கும் சூழலில் பெண்களுக்கன  திட்டங்கள் உள்ளிட்டவையை  நடைமுறைப்படுத்தியமை பாராட்டுக்குரியது.

அதேதருணத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் பங்களிப்பு நேர்மையாகவும், அரசியல் ரீதியாக அல்லாமல், மாநில மக்களின் நலன் சார்ந்த வகையிலும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21