ஆசிய விளையாட்டு விழா ஹொக்கி : இலங்கை ஆடவர் அணி தகுதி

14 May, 2022 | 10:02 PM
image

(நெவில் அன்தனி)

ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான ஹொக்கி போட்டியில் பங்குபற்றுவதற்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கி தகுதிகாண் சுற்றில் 5ஆம் இடத்திலிருந்து 8ஆம் இடம்வரையான நிரல்படுத்தலுக்கான அரை இறுதிப் போட்டியில் ஹொங்கொங்கை 5 - 2 என்ற கொல்கள் கணக்கில் இலங்கை வெற்றிகொண்டது.

இந்த வெற்றியை அடுத்து 5ஆம், 6ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றது.

கொரோனா தொற்று நோய் பரவியதன் காரணமாக சீனாவின் ஹங்சூவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டபோதிலும் தகுதிகாண் போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெற்றுவருகின்றன.

பாங்கொக், குவீன் சேர்க்கிட் ஞாபகார்த்த விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கி தகுதிகாண் சுற்றில் முதல் 6 இடங்களைப் பெறும் அணிகள் ஆசிய விளையாட்டு விழாவில் பண்பற்ற தகுதிபெறும் என போட்டி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு அமைய ஏ குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற ஓமான் மற்றும் தாய்லாந்து ஆகியனவும் பி குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற பங்களாதேஷ் மற்றும் இந்தோனேஷியாவும் ஏற்கனவே தகுதிபெற்றிருந்தன.

இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற அரை இறுதிப் போட்டிகளில் இலங்கையும் உஸ்பெகிஸ்தானும் வெற்றிபெற்றதன் மூலம் கடைசி 2 அணிகளாக ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெற்றன.

ஹொங்கொங்குக்கு எதிரான போட்டியின் கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் 11 நிமிடங்கள் இடைவெளியில் 4 கோல்களைப் போட்டதன் மூலம் இலங்கை 5 - 2 என்ற கொல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

போட்டியின் 1ஆவது கால் மணி நேர ஆட்டத்தின் 2ஆவது நிமிடத்தில் பெனல்டி கோர்ணர் மூலம் முதலாவது கோலை இலங்கை சார்பாக டேமியன் கருணாமுனிகே போட்டார்.

எவ்வாறாயினும் 2ஆவது கால் மணி நேர ஆட்டத்தின்  17ஆவது நிமிடத்தில் ஹொங் கொங் சார்பாக விண்ட்ஃபோல் மொன்தொங் கள கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்ததுடன் 3ஆவது கால் மணி  நேர  ஆட்டத்தில் மேலதிக கோல் எதுவும் போடப்படவில்லை.

ஆனால், 4ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் அற்புதமாக விளையாடிய இலங்கை 4 கோல்களைப் போட்டதுடன் ஹொங் கொங் ஒரு கோல் போட்டது.

விப்புல பெர்னாண்டோ (பெனல்டி கோர்ணர் கோல் 46 நி., கள கோல் 56 நி.), உதயஷான் பெர்னாண்டோ (கள கோல் 47 நி.), சத்துரங்க சந்த்ரசேன (கள கோல் 57 நி.) ஆகியோர் 11 நிமிட இடைவெளியில் 4 கோல்களைப் போட்டனர்.

போட்டி முடிவடைய சில செக்கன்கள் இருந்தபோது பெனல்டி கோர்ணர் கோல் ஒன்றைப் போட்ட சிங் ஹோ, தனது அணிக்கு ஆறுதலைக் கொடுத்தார்.

நிரல்படுத்தலுக்கான மற்றைய அரை இறதிப் போட்டியில் சிங்கப்பூரை 4 - 2 என்ற பெனல்டி முறையில் உஸ்பெகிஸ்தான் வெற்றிகொண்டது.

இந்த போட்டி முடிவுகளுக்கு அமைய 5ஆம், 6ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நாளைய (15) போட்டியில் இலங்கையும் உஸ்பெகிஸ்தானும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58