மஹிந்தானந்த, துமிந்த, சந்திரசேன, சன்ன ஆகியோரின் வீடுகளை தாக்கியதாக கூறி தேரர் உள்ளிட்ட 8 பேர் கைது

14 May, 2022 | 08:25 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மே 9 வன்முறைகளின் போது, முன்னாள்  அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,  துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன ஆகியோரின் வீடுகளை தாக்கியதாக கூறி 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள்  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின்  நாவலபிட்டி வீடு மற்றும் மன்றத்தின்  மீதான தாக்குதல் குறித்து நால்வரும்,  துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன ஆகியோரின் வீடுகள் மீதான தாக்குதல் குறித்து நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 மஹிந்தானந்த அலுத்கமகே :

மே 9 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகேவின் வீடு மீது நாவலப்பிட்டியவில் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. 

தாக்குதலைத் தொடர்ந்து மஹிந்தானந்த அலுத்கமகேவின் செயலாளர் 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்த 16 பேரில் நால்வரையே  நாவலப்பிட்டி பொலிசார் கைது செய்து இன்று நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது சந்தேக நபர்களுக்காக இரு சட்டத்தரணிகள் கட்டணமின்றி ஆஜராகினர். இந் நிலையில் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நாவலபிட்டி நீதிவான்  நிலந்த விமலவீர அவர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணைகளில் செல்ல அனுமதியளித்தார்.

துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன :

இதேவேளை முன்னாள் அமைச்சர்களான  துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரின் அனுராதபுரம் இல்லங்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக கூறி,   தேரர் ஒருவரும், பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்களாக நால்வரை அனுராதபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர். 

இன்று பிற்பகல் அவர்களைக் கைதுசெய்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக அறிய முடிகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24