ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் மொஹமட் பின் சயீத் தெரிவு

Published By: Digital Desk 3

14 May, 2022 | 05:50 PM
image

ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாக இருந்தவ ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் (74) உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.

2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவராக இருந்து வந்தார். இதனால் அங்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மறைவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். எமது அயல் நாடான இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மறைவை அடுத்து, புதிய ஜனாதிபதியாக ஷேக் மொஹமட் பின் சையத் தெரிவாகி உள்ளார்.

Sheikh Mohamed bin Zayed elected as UAE's president
ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சையத்

ஷேக் கலீஃபா கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் நேற்று (13) அவர் காலமானதை தொடர்ந்து அவரது சகோதரர் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் நாட்டின் மூன்றாவது ஜனாதிபதி என்ற பெருமையை ஷேக் மொஹமட் பின் சையத் பெற்றுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என தெரிகிறது. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆயுதப்படைகளின் துணை தளபதியாகவும் பணியாற்றி உள்ளார். ஆயுதப்படைகள் திட்டமிடல், பயிற்சி, பாதுகாப்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17