இறுதித் தருணத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை போன்றது சஜித்தின் தீர்மானம் - விமல்

Published By: Digital Desk 5

14 May, 2022 | 10:43 AM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவே இல்லாதொழித்தார்.

Wimal to set up 20 Advisory Councils to boost industrial development |  Daily FT

இறுதி தருணத்தில் தானும் திருமணத்திற்கு தயார் என்று குறிப்பிடுவதை போன்றே அவர் இறுதி தருணத்தில் பிரதமர் பதவியை ஏற்க தயார் என ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கு கொள்ளுமாறு எமக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது இருப்பினும் சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லை என்பது உறுதிப்படுத்தும் பட்சத்தில் பிரதமர் பதவி தொடர்பில் கேள்வி நிலை தோற்றம் பெறும்.பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்துவது பிரதமரின் செயற்பாட்டை பொறுத்து தீர்மானிக்கப்படும்.

சர்வக்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவே இல்லாதொழித்தார்.

இறுதி தருணத்தில் தானும் திருமணத்திற்கு தயார் என்று குறிப்பிடுவதை போன்றே அவர் இறுதி தருணத்தில் பிரதமர் பதவியை ஏற்க தயார் என ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04