பிரதமர் அதிரடி நடவடிக்கை ! அத்தியாவசிய தேவை தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட குழு

13 May, 2022 | 06:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் நிலவும் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் திரவங்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு யோசனைகளை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து பொருட்கள் விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன்,உரம் தட்டுப்பாடு மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்கும் பொறுப்பு  ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஆராயும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் உரிய துறைசார் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்வு தொடர்பிலான அறிக்கையை பிரதமரிடம் நேரடியான கையளிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30