இலங்கையர்களுக்கான விசா வழங்கலை நிறுத்தியதா இந்தியா ? - உயர்ஸ்தானிகராலயம் தெளிவுபடுத்தல்

Published By: Digital Desk 3

13 May, 2022 | 04:40 PM
image

(நா.தனுஜா)

இலங்கையர்களுக்கான விசா வழங்கலை இந்தியா இடைநிறுத்தியிருப்பதாக வெளியான செய்திகளை மறுத்திருக்கும் இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம், அச்சேவைகள் சீராக இயங்குவதில் சில சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெளிவுபடுத்திருக்கின்றது.

இலங்கையர்களுக்கான விசா வழங்கலை இந்தியா இடைநிறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து, இதுகுறித்து வழங்கியுள்ள தெளிவுபடுத்தலிலேயே இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் மேலும் கூறியிருப்பதாவது,

நாமோ (இந்திய உயர்ஸ்தானிகராலயம்) அல்லது இந்திய கொன்சியூலர் நாயகமோ அல்லது இலங்கையிலுள்ள இந்தியத்துணைத்தூதரகங்களோ விசா வழங்கலை நிறுத்தியிருப்பதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக மறுக்கின்றோம்.

பெரும்பாலானவர்கள் இலங்கையர்களாக இருக்கக்கூடிய விசா பிரிவு ஊழியர்கள் கடந்த சில தினங்களாக அலுவலகத்திற்கு வருகைதரமுடியாமல்போனதன் காரணமாக, அதற்குரிய நடைமுறைகள் சீராக இயங்குவதில் சிக்கல்கள் காணப்பட்டன.

இலங்கையர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதை எளிதாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். 

இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப்போன்று இலங்கையர்களும் இந்தியாவிற்கு வரவேற்கப்படுகின்றனர் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31